வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
டாக்கா: வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞர் திபு சந்திர தாஸ் குடும்பத்திற்கு, 2 மாதங்களுக்குப் பிறகு ரூ.29லட்சம் வங்கதேச இடைக்கால அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய, எதிர்க்கட்சி தலைவர் மீது கடந்த டிசம்பர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் குதித்ததால் அங்கு பதற்றம் நிலவியது. அந்த வகையில் டிசம்பர் 18ம் தேதி நடந்த வன்முறையின் போது, மைமென் சிங் மாவட்டத்தில் பலுகா உபாஜிலா என்ற இடத்தில் திபு சந்திர தாஸ்(30) என்ற ஹிந்து மதத்தை சேர்ந்தவரை வன்முறையாளர்கள் அடித்து கொன்றனர்.
அவரது உயிர் போகும் வரை தாக்கிய அந்த கும்பல், அவரது உடலை அருகில் இருந்த பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். பிறகு தேசிய நெடுஞ்சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது பொது தேர்தலுக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில், எரித்துக் கொல்லப்பட்ட இளைஞர் திபு சந்திர தாஸ் குடும்பத்திற்கு, 2 மாதங்களுக்குப் பிறகு ரூ.29லட்சம் வங்கதேச இடைக்கால அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
மேலும்
-
சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்
-
இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
-
இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்
-
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு
-
நமீபியாவை வென்றது நெதர்லாந்து
-
10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்