டென்னிஸ் வீரர் தக்ஷ்னேஷ்வர் சுரேஷூக்கு அண்ணாமலை வாழ்த்து

சென்னை: டேவிஸ் கோப்பையில் இந்தியாவை 2வது தகுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்ற வீரர் தக்ஷ்னேஷ்வர் சுரேஷூக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

நாட்டுக்கு பெருமை தரும் அத்தியாயத்தை எழுதியதற்காகவும்,டேவிஸ் கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்தி மூவர்ண கொடியை உயரே கொண்டு சென்றதற்காகவும், சிறப்பான ஆட்டத்தின் மூலம் ,இந்தியாவை 2வது சுற்றுக்கு அழைத்துச் சென்றதற்காகவும் தக்ஷினேஷ்வர் சுரேஷூக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நமது நாட்டிற்கு 3க்கு 2 என்ற வரலாற்று வெற்றியை பெற்று தந்திருக்கிறார். மதுரையின் மகனான அவரால் மதுரை பெருமை கொள்கிறது. டேவிஸ் கோப்பையின் புதிய நாயகனால் இந்தியா பெருமை அடைகிறது. வரும் ஆண்டுகளில் நம் நாட்டுக்கு மேலும் பல விருதுகளை பெற்றுத்தரட்டும்.

இவ்வாறு தமது வாழ்த்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement