இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்

கொழும்பு: 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் ஹசரங்கா.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு, ஆல் ரவுண்டர் ஹசரங்கா 28. 'டி-20' உலக கோப்பை தொடரில், கொழும்புவில் நடந்த முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக களமிறங்கினார். இதில் ஹசரங்கா இடது தொடையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் போட்டி முழுவதும் பங்கேற்றார். பந்துவீச்சில் 3 விக்கெட் (3/25, 4 ஓவர்) சாய்த்து, அணியின் வெற்றிக்கு உதவினார்.
அடுத்து இலங்கை அணி ஓமன் (பிப். 12), ஆஸ்திரேலியா (பிப். 16), ஜிம்பாப்வேயை (பிப். 19) சந்திக்க உள்ளது. இதனிடையே ஹசரங்கா காயம் குறித்து ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் தசை நார்கள் கிழிந்துள்ளது தெரியவர, உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். இவருக்குப் பதில் துஷன் ஹேமந்தா சேர்க்கப்பட்டார்.

Advertisement