திருப்பரங்குன்றம் மலை தர்காவில் தினசரி தொழுகைக்கு அனுமதி மறுப்பு
- டில்லி சிறப்பு நிருபர் -
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் தினசரி தொழுகை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பண்டிகை நாட்களில் தொழுகை நடத்தலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில், நெல்லித்தோப்பு தர்கா உள்ளது. இங்கு முஸ்லிம்கள் ஆண்டு முழுதும் தொழுகை நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, ரம்ஜான் மற்றும் பக்ரீத் நாட்களில் மட்டும் தொழுகை நடத்தலாம். அனைத்து நாட்களிலும் தொழுகை நடத்த அனுமதி இல்லை. மலையில், விலங்குகளை பலியிடுவது குறித்து தகுதிவாய்ந்த உரிமையியல் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, எந்த ஒரு பலியிடுதல், சமைத்தல், அசைவ உணவைக் கொண்டு செல்வது, பரிமாறுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இமாம் உசேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், 'உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டுகளை நீக்க வேண்டும். தர்காவில் அனைத்து நாட்களிலும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என, கோரப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், பி.பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை மையமாக வைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, சமநிலையான உத்தரவாக தெரிகிறது. இந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, உத்தரவிட்டனர்.
இதன்படி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தொழுகை நடத்துவதும், விலங்குகளை பலியிட கூடாது என்பதும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக உறுதியாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லை. மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கலெக்டர் சாதாரணமாக 144 போட்டிருந்தால் தவறில்லை. நீதிமன்ற தீர்ப்பை - ஒரு 10 பேர் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்குவது - போலீஸ் காவலுடன் நடைபெற அனுமதித்திருந்தால் - 144 போட்டதற்கு பாராட்டும் கிடைத்திருக்கும். தன்னிச்சையாக என்று அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் நீதிமன்ற தீர்ப்பை நடக்க விடாமல் தடுக்க 144 போட்டதுதான் தவறு. நல்லவேளை நீதிபதி மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை தண்டிக்கவில்லை. பணிநீக்கம் போன்ற தண்டனை அளித்திருந்தால் வாழ்நாள் முழுதும் துயரம் வந்திருக்கும்.
தர்கா அமைத்திருப்பது முருகனின் தளம் என்றாலும் அவர்கள் ஆண்டுமுழுவதும் வழிபட அனுமதியளிக்கவேண்டும். அதேபோல இந்துக்களின் வழிபாடுகளில் தேவையின்றி அவர்கள் தலையிடக்கூடாது.. அரசு தீபத்தூணில் தீபமேற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என நீதிமன்றம் செல்லும்போது முஸ்லீம் அமைப்புகள் மற்றும் வக்போர்ட் ஆகியவை இந்துக்கள் தீபம் ஏற்றுவதில் எங்களுக்கு ஆட்சபனை இல்லை தீபத்தூண் எங்கள் எல்லைக்குள் இல்லை என சொல்லியிருந்தால் அது நேர்மை. தீபத்தூண் தர்கா எல்லைக்குள் இருந்து தீபம் ஏற்ற அனுமதியளித்திருந்தாலும் அது சமூக நல்லிணக்கமாக போற்றப்படும். வாக்கு வங்கிக்காக நாடகமாடிய அரசு. இந்துக்களின் வெறுப்புக்கும் ஆளான முஸ்லீம்கள் வென்றது என்னவோ நீதி
சரியான தீர்ப்பு, வேற்றுமை ஒற்றுமை என்று சொல்லி விட்டு மத கலவரங்கள் அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்படும் குழப்பங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் சிறுபான்மையினர் அதை புரிந்து கொள்ள வேண்டும்
மிக அருமையான சரியான தீர்ப்பு. திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தமானது. ஹிந்துக்களின் பண்டிகைகளை கேவலபடுத்திய திராவிஷ மாடல் அரசு ஒழிய வேண்டும். திமுக தோற்பது உறுதி உறுதி உறுதி
தமிழக இந்துக்கள் ஜாதி மதம் பார்க்காமல் ஒன்றிணைந்து இப்போதுள்ள இந்த பொது எதிரியை அடித்து விரட்டினால் ஒழிய இந்துகளின் கோயில்களை காப்பாற்ற முடியாது....
மிக அருமை சாதியத்தை ஒழித்து அனைவரும் ஹிந்து என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்து இந்திய தேசத்தை ஹிந்துக்கள் தேசம் என பிரகடன்படுத்த அனைவரும் சத்திய பிரமாணம் எடுக்க வேண்டும் ..
நன்று
அன்று தமிழக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை திமுக அரசு கொஞ்சமும் மதிக்கவில்லை. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு கிடைத்த பெரிய மரண அடி. தமிழர்களின் உணர்வையும் சைவநெறிக் கொள்கைகளையும் கோட்ப்பாடுகளையும் கொஞ்சமும் அறியாத மதிக்காத முதல்வர் அவர்கள் தன்னை இனிமேலாவது தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் .
சைவத்தின் அடிப்படைக் கோட்ப் பாடுகள் கொள்கைகளையே அவர் இன்னும் சரியாக உணராமல் இருக்கின்றார். "ஒன்றேகுலம் ஒருவனே தேவன்", உயிர்க் கொல்லாமை மற்றும் புலாலுண்ணாமை தமிழர்கள் போற்றும் உயர்ந்த நெறிகள். அவரின் கடந்தகால நடவடிக்கைகள் அனைத்தும் இந்த உணர்வுகளை கொஞ்சமும் மதிக்கவுமில்லை, ஏற்றுக் கொள்ளவுமில்லை. திருப்பரங் குன்றத்தில் உயிர்க் கொல்லாமையை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் அவர் தமிழர்களின் தலைவர், இன்னும் அவரை சரியாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. இதன்பின் விளைவுகள் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் பாஜகவை அவர் அரசியலில் எதிர்ப்பதில் விமர்சிப்பதில் அவர் கொள்கையாக யிருக்களாம். ஆனால் இன்று நாட்டு மக்களால் மதிக்கப் படுகின்ற பாரதப் பிரதமரை அவர் தனிப்பட்ட முறையில் மதிக்க கட்டுப் பட்டுள்ளார். அவரை கேவலமாக விமர்சிப்பதை அவர் இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் இனிமேல் அவருக்கும் நல்லது, ஆட்சியை தக்கவைக்க வேண்டுமென்றால் அவர் ஆட்சிக்கும் நல்லது.
மோடி மலேஷியா செல்லும்போது அங்க உள்ள இந்து கோவில்களை அகற்ற கோரி முஸ்லீம் அமைப்பு கள் போராட்டம் நடத்தினர், தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம் கள் கலந்து கொண்டனர்,
இந்த அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது எந்தவகையிலும் ஏற்க முடியாது இவர்களுக்கும் இந்த கோயில்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மனிதாபமற்றச் செயல். இதில் தமிழ் முஸ்லீம்கள் கலந்துக் கொண்டது கண்கூடு. மிகவும் வருத்தப் படவேண்டிய செயல். தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது?
ஆ…ப்…பு .
அப்படி கூற கூடாது இந்துக்களாகிய நாம். முஸ்லீம் மக்கள் யாவரும் நம்முள் அடங்கிய ஒரு சொந்தங்கள் தான். வெறுமளவில் இறைவனை கருத்தில் கொண்டு நாம் நமக்குள் பிரிவினை கொள்ள கூடாது. நம் எல்லையில் ஜாதி மதம் வேறுபாடின்றி வீரர்கள் போதிய உணவு உறக்கம் இல்லாமல் பாதுகாப்பதால் தான் நாம் இங்கு நிம்மதியாக வாழ்கிறோம். யாரோ ஒரு சிலர் தூண்டி விடும் காரணத்தினால் மட்டும் நாம் பிளவுபட்டு வேறுபடுத்தி நிற்கின்றோம். நன்றாக யோசித்து பாருங்கள் ஒரு 20, 25 வருடங்கள் முன்பு இதே திருப்பரங்குன்றம் மலையில் இந்து முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக சென்று அவரவர் கடவுளை அமைதியாக வேண்டிக்கொண்டு மற்றொருவருக்கு தொந்தரவு தராமல் அன்பாக ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இன்றோ யாரோ ஏற்றி விட்டதால் இது எங்கள் மலை என்று ஆளாளுக்கு சொல்லி கொண்டு சண்டை போட்டு ஒற்றுமையை மறந்து விட்டோம். சிந்தியுங்கள். தவறு இருந்தால் மன்னிக்கவும். நன்றி
பாபு,நெல்லை.... இதை அப்படியே போய் பங்களாதேஷில் போய் சொல்லுங்கண்ணே... பாகிஸ்தானியருக்கும் இந்த அறிவுரையை கூறுங்கள்... இஸ்லாமியர்களுக்கும் இந்த அறிவுரை கூறுங்கள்... இந்துக்கள் எப்போதும் பெருந்தன்மையானவர்களே... தீபத்தூணில் தீபம் ஏற்ற சொல்லிய கோர்ட் ஆர்டரை மதிக்காத திமுகவுக்கு இந்த அறிவுரையை கூறுங்கள்.மேலும்
-
வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
-
'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி
-
திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
-
சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது
-
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர் வேதனை
-
திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு