மத்திய பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் படிக்கவில்லை; மத்திய அமைச்சர் புகார்
சென்னை: ''மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியில், தமிழகத்திற்கு ஒதுக்கியதை விட, பா.ஜ,., ஆட்சியில், 300 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
நாட்டில் வங்கி துறையில் முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர, உயர் மட்ட குழு அமைக்கப்பட உள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல், ரயில்வே, தொழிற்சாலை உட்பட அனைத்து துறைகளிலும் முதலீடுகளை ஈர்க்க, சீர்திருத்தங்கள் வர உள்ளன.
தமிழகத்தில் இரு விரைவு ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான மூலதன செலவுகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, 12.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேங்காய் மகசூலை அதிகரிக்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்திற்கு அதிக பலனை கொடுக்கும்.
மத்திய பட்ஜெட்டை, முதல்வர் ஸ்டாலின் முறையாக படிக்கவில்லை என, கருதுகிறேன். ரயில்வே, துறைமுகம் என, பல திட்டங்களில் தமிழகம் பெயர் இடம்பெற்றுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியில் ஒதுக்கியதை விட, தற்போது தமிழகத்திற்கு, 300 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாதாரண மக்களுக்கே அதில் படிக்க ஒன்றும் இல்லை படிக்கத் தேவை இல்லாத வெட்டிச் சடங்கு படித்தால் என்ன படிக்காமல் போனால் என்ன? ஒன்றும் குடி முழுகிப் போகாது
அவை ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்கள்.
எல்லா பிரச்சனையையும் மத்திய அரசின் மீது போட்டு விட்டு, பிரச்னையை திசை திருப்பி விட்டால் தானே அடுத்த 5 ஆண்டுகள் பதவியை பிடிக்க முடியும். மாறி மாறி பேசி மக்களை குழப்புவது மக்களை சிந்திக்க விடாமல் செய்யவே.
அமைச்சர் ஐயா தலையில் கருப்பு சிவப்பு தலப்பா செம யா இருக்கு.
அதை ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தால் தான், படிப்பார், தப்பும் தவறுமாக.
மத்திய பட்ஜெட் பல துண்டு சீட்டாக இருந்தால் படிச்சி இருப்பாரு ....
பொய் மட்டுமே சொல்லத்தெரிந்த தீம்க்காவினர் உண்மை பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே தமிழக பிரதான பத்திரிக்கைகளில் மத்திய அரசு ஒதுக்கப்பட்ட தொகை பற்றிய தகவல்களை செய்திக்குறிப்பாக வெளியிட வேண்டும்.
அது சரி..... துண்டு சீட்டை படிப்பதற்கே நாக்குத்தள்ளுது..... மத்திய அரசு பட்ஜெட் உப்பு சப்பில்லாதது... மாநில அரசு பட்ஜெட் மக்களுக்கானது...... இப்படி சொல்லியே தான் வழக்கம்
படிக்கத் தெரிந்தால், படிக்க மாட்டோமாய்யா.
நிர்மலா மேடம் படிக்கும் போது, தமிழ் நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை.
திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்ப நிதிகள் இல்லா நிலை வரும் நாள் நல்ல நாளே. அது நல்ல சேதிதானேமேலும்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
-
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை
-
அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
-
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்
-
100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்: ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து!