'சந்திரயான் - 4' திட்டம் நிலவில் தரையிறங்கும் இடம் தேர்வு
பெங்களூரு: 'சந்திரயான் - 4' திட்டத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடையாளம் கண்டுள்ளது.
'சந்திரயான் - 3' திட்ட வெற்றியைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள, 'இஸ்ரோ' முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு, 'சந்திரயான் - 4' என பெயரிடப்பட்டது. ஆனால் இது, 'சந்திரயான் - 3' போலல்லாமல், நிலவின் மண்ணை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டம்.
'சந்திரயான் - 4' திட்டத்தில், உந்துவிசை தொகுதி, தரையிறங்கும் தொகுதி, மேலே றும் தொகுதி, மாற்றும் தொகுதி, மீண்டும் நுழைவு தொகுதி - -இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும் ஆகியவை இடம் பெற உள்ளன. 2028ல், 'சந்திரயான் - 4' திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், 'சந்திரயான் - 4' திட்டத்தில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை இஸ்ரோ அடையாளம் கண்டுள்ளது.
நில வின் தென் துருவத்தில் உள்ள எம்.எம்., எனப்படும், 'மான்ஸ் மவுட்டன்' என்ற பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்க உள்ளது. இ தற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எம்.எம்., 4 என்ற இடத்தை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
@block_B@
எம்.எம்., 4 பகுதியில் பள்ளங்கள் மற்றும் பாறைகள் போன்ற தடைகள் மிகக் குறைவாக உள்ளன நிலப்பரப்பின் சராசரி சாய்வு, 5 டிகிரி மட்டுமே. இது விண்கலம் நிலைத்தடுமாறாமல் தரையிறங்க உதவும் உயர் ரக கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததில் இந்த பகுதி தகுந்த இடமாக தேர்வுblock_B
இனிய வாழ்த்துக்கள்....
நிலவில் இருந்து பூமியில் ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் அதிகம் சொத்து சேர்த்தவரின் வீட்டை புகைப்படம் எடுத்தால் அதில் சென்னை கோபாலபுரத்தில் வாழ்ந்த ஒருவரின் வீட்டின் மாடி தெரியும்.
பத்திர பதிவு, வில்லங்க சான்றிதழ் எல்லாம் சரியா இருக்கா?
வாழ்த்துக்கள் இஸ்ரோ..மேலும்
-
வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
-
'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி
-
திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
-
சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது
-
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர் வேதனை
-
திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு