நரவனே எழுதிய புத்தகம் 'லீக்' டில்லி போலீஸ் வழக்கு பதிவு
புதுடில்லி: ராணுவ முன்னாள் தளபதி நரவனே, 65, எழுதிய, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' புத்தகம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், சமூக ஊடகங்களில் அந்த புத்தகம் கசிந்த விவகாரத்தில், டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, 2019 டிச., - 2022 ஏப்., 30 வரை, நம் ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றினார்.
இவர், 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற பெயரில், தன் சுயசரிதை புத்தகத்தை எழுதி உள்ளார். அதில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினர் உடனான மோதல் உட்பட பல்வேறு விவகாரங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த புத்தகத்துக்கு ராணுவ அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதே சமயம், 'கேரவன்' என்ற ஆங்கில இணையதளத்தில் புத்தகத்தில் உள்ள சில முக்கிய தகவல்கள் வெளியாகின. இதை சுட்டிக்காட்டி, நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பார்லி., வளாகத்தில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், இதுவரை வெளியாகாத, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' புத்தகத்தை உயர்த்தி காண்பித்தார். வெளி வராத புத்தகம் ராகுலுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்ற பேச்சு டில்லி அரசியலில் அடிபட்டது.
இந்நிலையில், 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' புத்தகத்தின் நகல் மற்றும் பி.டி.எப்., வடிவிலான கோப்பு, சமூக ஊடகங்களில் பரவி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நகல், 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' என்ற நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிந்து டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நரவனே கூடிய விரைவில் ஆன்டி நேஷனல் ஆக அறிவிக்க படுவார் ....மேலும்
-
வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
-
'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி
-
திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
-
சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது
-
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர் வேதனை
-
திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு