மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் 'மஹாயுதி' கூட்டணி வெற்றி
மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 15ல், மும்பை உட்பட, 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் மும்பை, புனே உட்பட பெரும்பாலான மாநகராட்சிகளை, மஹாயுதி கூட்டணி கைப்பற்றியது.
இந்நிலையில், புனே, ரத்னகரி, ராய்கட், சோலாப்பூர் உட்பட, 12 மாவட்டங்களில் உள்ள, 719 இடங்களுக்கு, கடந்த 7ல் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. மேலும், 125 பஞ்சாயத்து குழுக்களில் உள்ள, 1,462 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.
மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் மறைவுக்கு பின் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில், 12 மாவட்டங்களில் உள்ள, 719 இடங்களுக்கு நடந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி, 552 இடங்களை கைப்பற்றி சாதித்துள்ளது. இதில், 225 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா - 162; மறைந்த அஜித் பவாரின் தேசியவாத காங்., 165 இடங்களையும் கைப்பற்றின.
காங்., - உத்தவ் சிவசேனா - சரத் பவார் அணி அடங்கிய, எதிர்க்கட்சி கூட்டணியான, 'மஹா விகாஸ் அகாடி' 150 இடங்களை கூட பெறவில்லை. பஞ்சாயத்து குழுக்களுக்கு நடந்த தேர்தலிலும், மஹாயுதி கூட்டணியே அதிக இடங்களை வென்றுள்ளது.
மேலும்
-
சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்
-
இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
-
இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்
-
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு
-
நமீபியாவை வென்றது நெதர்லாந்து
-
10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்