வகுப்பறையில் சக மாணவியை சுட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவர்
சண்டிகர்: பஞ்சாபில் சட்டக்கல்லுாரி மாணவர், சக மாணவியை வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பின், தானும் சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மாணவர், தற்போது அபாயக்கட்டத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
பஞ்சாபில் தர்ன் தாரன் மாவட்டத்தின் உஸ்மா பகுதியில், தனியார் சட்டக்கல்லுாரி இயங்கி வருகிறது.
இங்கு முதலாம் ஆண்டில் மல்லியன் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் ராஜ் என்ற மாணவரும் நவுஷேரா பன்னுவான் பகுதியைச் சேர்ந்த சந்தீப் கவுர் என்ற மாணவியும் படித்து வந்தனர்.
வழக்கம்போல், நேற்று காலை தங்கள் வகுப்பறைக்குள் நுழைந்த இவர்கள், தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
சக மாணவியுடன் பேசியபோது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த பிரின்ஸ், சந்தீப் கவுரின் தலையில் திடீரென சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அதே துப்பாக்கியால் பிரின்சும் தன்னை தானே சுட்டுக் கொண்டார். வகுப்பறைக்குள் நடந்த இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சக மாணவ - மாணவியர் அலறியடித்தபடி கல்லுாரி நிர்வாகத்தி டம் தெரிவித்தனர்.
உயிருக்கு போராடிய பிரின்ஸ் ராஜை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
கவலை க்கிடமான நிலையில் உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வகுப்பறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரின்ஸ் ராஜ், சந்தீப் கவுரை ஏன் துப்பாக்கியால் சுட்டார்; கல்லுாரி வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் எப்படி நுழைந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
அங்குள்ள அணைத்து மாணவர்களுக்கும் அத்தனை கதைகளும் தெரியும்
பஞ்சாப்பில் காலேஜ் படிக்கும் பசங்களுக்கே துப்பாக்கி கிடைக்கிறது - அதுவும் மாணவர்கள் வாங்கும் அளவுக்கு குறைந்த விலையில். சபாஷ்.மேலும்
-
வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
-
'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி
-
திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
-
சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது
-
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர் வேதனை
-
திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு