சிறுமி பாலியல் பலாத்காரம் காதலன் உட்பட 3 பேர் கைது

பேரையூர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி, சிவகாசியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவரை, ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவர் பிப்., 6ல் சிறுமியை, டூ - வீலரில் அழைத்து சென்று, அணைக்கரைப்பட்டியில் உள்ள தோட்டத்தில், பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து, மாணவரின் உறவினரான அணைக்கரைப்பட்டி சதீஷ், 22, அதே ஊரை சேர்ந்த கார்த்திக், 35, ஆகிய இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அங்கிருந்து தப்பிய சிறுமி, போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சிறுமியின் காதலர், சதீஷ், கார்த்திக் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement