உடலில் தடிப்பு ஏற்பட்டு பள்ளி மாணவி உயிரிழப்பு
திருச்செங்கோடு: பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த மாணவி, உடலில் தடிப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். அவரை விஷ பூச்சி கடித்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், 87 கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 32; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி, 28. இத்தம்பதியின் மகள் ரக்ஷிதா, 8; குமரமங்கலம் ஊராட்சி தொடக்க பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தார்.
நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ரக் ஷிதா ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது உடலில், திடீரென தடிப்புகள் ஏற்பட்டு, மயக்கமடைந்தார். ஆசிரியர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த ரக்ஷிதா, நேற்று மதியம் உயிரிழந்தார்.
திருச்செங்கோடு போலீசார், மாணவிக்கு உடல்நல குறைபாடா அல்லது விஷப்பூச்சி கடித்து இறந்தாரா என, விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
-
'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி
-
திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
-
சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது
-
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர் வேதனை
-
திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு