காதல் மனைவியை கொல்ல முயன்ற கணவனுக்கு 'காப்பு'
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக பணிபுரிபவர் குல்லுார் சந்தையை சேர்ந்தவர் பாண்டிமீனா, 24. அரசகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, பாண்டிமீனா கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டில் இருந்து பணிக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனைக்கு சென்ற வெற்றிவேல், ஆய்வகத்தில் இருந்த பாண்டிமீனாவிடம், தகராறு செய்து, அவரது சுடிதார் துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்.
சத்தம் கேட்டு, வார்டில் இருந்த நோயாளிகள் வந்ததால், வெற்றிவேல் தப்பி ஓடினார்.
விருதுநகர் கிழக்கு போலீசார், வழக்குப்பதிந்து, வெற்றிவேலை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
-
'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி
-
திருநெல்வேலியில் 9வது பொருநை புத்தகத் திருவிழா தொடக்கம்: நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர் செ.திவான் புறக்கணிப்பு
-
சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது
-
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர் வேதனை
-
திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement