உலக கோப்பை லங்காடி போட்டிக்கு முதுகுளத்துார் வீரர் தேர்வு

முதுகுளத்துார்: பிப்., முதல் வாரத்தில் மஹாராஷ்டிராவில் தேசிய லங்காடி விளையாட்டு போட்டி நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரைச் சேர்ந்த இந்திய லங்காடி அணி தலைவர் தேவசித்தம் உலககோப்பை போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 வீரர்கள் பூடான் நாட்டில் அக்டோபரில் நடைபெற உள்ள உலக கோப்பை லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து தேவர்சித்தம் கூறியதாவது, எனது தலைமையில் இதற்கு முன் சிங்கப்பூரில் உலகக்கோப்பை, நேபாளில் ஆசிய கோப்பை, பூடான் நாட்டில் தெற்காசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை நடத்த ஆசிய லங்காடி கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு உலககோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம் என்றார்.

Advertisement