போராட்டத்தில் பங்கேற்றதால் 8 ஊராட்சி செயலர் இடமாற்றம்

ஆத்துார்: தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி, கடந்த, 4 முதல், ஊராட்சி செயலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் பங்கேற்றோர் மீது, சஸ்பெண்ட், இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில், 8 ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாநந்தினி, நேற்று உத்தரவிட்டார்.


அதன்படி ஆத்துார், தாண்டவராயபுரம் சுவாமி, வாழப்பாடி, திருமனுார்; கொளத்துார், கோல்நாயக்கன்பட்டி வெங்கடேஷ், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி; கொங்கணாபுரம் குரும்பட்டி முத்துமாணிக்கம், ஓமலுார், கொல்லப்பட்டி; மகுடஞ்சாவடி, ஏகாபுரம் சரவணன், பனமரத்துப்பட்டி, சந்தியூருக்கு மாற்றப்பட்டனர்.


அதேபோல் மகுடஞ்சாவடி, தப்பக்குட்டை சாந்தி, அயோத்தியாப்பட்டணம், சின்னனுார்; தாரமங்கலம், கருக்கல்பட்டி ராமச்சந்திரன், தலைவாசல், ஊனத்துார்; தாரமங்கலம், பாப்பம்பாடி கணேசன், பெத்தநாயக்கன்பாளையம், தாண்டனுார்; தாரமங்கலம், துட்டம்பட்டி ஜானகி, பனமரத்துப்பட்டி, மூக்குத்திப்பாளையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement