'போதை'யால் கோஷ்டி மோதல் 4 பேருக்கு உருட்டுக்கட்டை அடி
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் அடுத்த சன்னியாசிகுண்டு, வாடி பகுதியை சேர்ந்த மேள குழுவினர், கோவில் திருவிழாவுக்கு வெள்ளோட்டம் பார்த்து தயார்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி சண்முகம், 25, கதிரவன், 24, ஆகியோர், போதையில் மேளத்துக்கு ஏற்ப ஆட்டம் போட்டனர்.
அதேபோல் மணிமாறன், 39, விஜய், 40, ஆகியோர் தனியே ஆடினர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் சண்முகம், விஜய் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின் அவர்கள், சமாதானப்படுத்தி அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சண்முகம், 6 பேர் கொண்ட கும்பலுடன் சென்று, மணிமாறன், விஜய் ஆகியோரை வீடு புகுந்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த மணிமாறன், விஜய் உள்பட, 4 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்
-
இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
-
இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்
-
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு
-
நமீபியாவை வென்றது நெதர்லாந்து
-
10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்
Advertisement
Advertisement