எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி; முடங்கியது லோக்சபா
புதுடில்லி: ராகுலை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், ஜன., 28ல், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. கடந்த 1ல், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும், இதுவரை வெளியிடப்படாத அவரது சுயசரிதையான, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார். 'வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டி சபையில் பேசக் கூடாது' என, சபாநாயகர் ஓம் பிர்லாவும் கண்டிப்பு காட்டினார்.
அன்றைய தினம் முதல் அவை செயல்பட விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்றும் (பிப் 10) லோக்சபா கூடியதும் ராகுலை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா முடங்கியது. அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல், ராஜ்யசபாவிலும் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 2 மணி வரை அவையை, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஒத்தி வைத்தார்.
சாட்டையை சுழற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது சபாநாயகர் அவை கூடியதும் சாட்டையை எடுத்து சுழற்ற வேண்டும் மற்றவர்களை வெளியில் அனுப்பி விடவும்
இவங்களுக்கு வைத்தியம் முற்றி விட்டது.... தேசத் துரோகிகள்
எதிர்க்கட்சி எம்பிக்களாக தேர்ந்தெடுத்த நாட்டு மக்களின் குற்றம் தான் இது. பாத்திரமறிந்து பிச்சை இட வேண்டும் என்று இதைத் தான் சொல்கின்றனரோ!
காங்கிரஸ்/திமுக எம் பி ஆக வந்தால் இப்படிதான்
வெளி வராத தகவல்களை சொல்லி லோக்சபாவை களங்கபடுத்துகிறார்?
ராகுலை முன்னிலைப் படுத்தி ஏன் இண்டி கூட்டணி பேயரை கெடுத்துக் கொள்கிறார்கள்?
பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது!
ஆமாம் காங்கிரஸ் ஆட்சியில் அப்படியே பட்டுக் கம்பளத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்டது இல்லையா? சர்வாதிகாரம் என்பதன் முழு அடையாளமே இந்திரா காந்தி தான்... ஊழலுக்கு முன்மாதிரியே பொம்மை மன்மோகனை வைத்துக்கொண்டு, நிழல் பிரதமராகச் செயல்பட்ட சோனியாவின் திருட்டு ஆட்சிதான்.
parliament runs in an order. This is budget session, after brief by FM, the LOP will be given his chance to talk. why not use that slot to raise his concerns, instead of interrupting the entire proceedings ? Do you think, the govt run away from this questions when asked at right time ?. the Publication agent denied there is not even a single book out for public both within India and outside. This is a clear plan to stall the parliament proceedings by the shameless creatures.
வேணு குடும்பம் பிழைப்பதற்கு இருநூறு ரூபாய் வேண்டும்..என்ன செய்ய
நல்லது நடக்க விடமாட்டோம் நாங்கள் திராவிட கூட்டணி.
இல்லாட்டி மட்டும் மக்களுக்கு பாஜக அரசு நல்லதை பற்றி பேசவா போறாங்க...
எது நல்லது
தாங்கள் அடையவே முடியாத தேசத்தை ஆளுகின்ற பதவிக்காக தோல்வியை சந்தித்த கும்பல்கள் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றுகொண்டுள்ள உலகமே போற்றுகின்ற பிரதமர் மோடிஜியை பெண்கள் கும்பல்களை கொண்டு தாக்க நினைத்த காங்கிரசுக்கு இந்த நாடே மீண்டும் வேறுவகையில் தக்க பாடம் புகட்டுவார்கள். சட்டமன்றத்தில் அன்றைக்கு அம்மா ஜெ அவர்களை தாக்கியது போன்றே இப்போது மோடிஜி மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அந்த ரவுடி கும்பல்களை பாராளுமன்றத்திலிருந்து நிரந்தரமாக நீக்கிட ஆளும் பாஜக சிந்திக்க வேண்டும். பார்லியில் இருக்கின்ற பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் என்ன செய்துகொண்டுள்ளார்கள்? என்போன்றோர் அங்கிருந்திருந்தால் அவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே பாடம் புகட்டியிருப்பேன். பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் பாணியில்தான் பாஜக செயல்பட வேண்டும். முடக்க நினைப்பவர்களை நிரந்தரமாக முடக்கிவிட வேண்டும் வீட்டிலேயே முடங்கும் வகையிலே
முதலும் முடிவுமாக ராகுலின் அரை வேக்காடுதனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பேச விட்டு மடக்க வேண்டும். 5,6 மாநிலங்களில் பிழைக்கும்மேலும்
-
சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்
-
இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
-
இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்
-
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு
-
நமீபியாவை வென்றது நெதர்லாந்து
-
10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்