தனியார் நிறுவன ஊழியர்கள் டூ - வீலர் வாங்க அழைப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தனியார் நிறுவனங்களிடமிருந்து இணைய வழியாக பணி ஏற்று பணிபுரியும் தொழிலாளர்கள், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் தனியார் தொழிலாளர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு, அரசு மானியமாக 20,000 ரூபாய் வழங்கப் படுகிறது.

மேலும் விபரங்களை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம், 4ம் தளத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - 2742 6500 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Advertisement