அமெரிக்க ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை * போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கம் ஆதரவு இல்லை
மதுரை: ‛‛இந்திய-- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. இதை வைத்து அரசியல் செய்வதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் பாரதிய கிசான் சங்கம் ஆதரவு தராது,'' என தேசியத் துணைத்தலைவர் பெருமாள் மதுரையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மத்திய வேளாண் அமைச்சர் வெளியிட்ட விளக்கத்தின் படி சோயாபீன், மக்காச்சோளம், அரிசி, கோதுமை, சர்க்கரை, தானியங்கள், கோழிப்பண்ணை பொருட்கள், பால், பால் தயாரிப்புகள், வாழை, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, உலர் பழங்கள், பச்சை பட்டாணி, கடலை, பாசிப்பயறு, எள், எத்தனால், புகையிலைப் பொருட்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் வரம்புக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி இல்லை அமெரிக்காவில் இருந்து மாவு, கோதுமை, மக்காச்சோளம், அரிசி, கம்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி, பீன்ஸ், வெள்ளரிக்காய், காளான், பருப்பு வகைகள், உறைநிலை காய்கறிகள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, கலப்பு டின் காய்கறிகளுக்கு இந்திய சந்தையில் அனுமதி வழங்கவில்லை.
அதேபோல பால், பால் தயாரிப்புகள், மசாலா பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படாது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என்பதை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ்கோயல் அறிவித்துள்ளதை விவசாயிகள் வரவேற்கின்றனர்.
அமெரிக்காவின் பல விவசாயப் பொருட்கள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதியில்லை என்ற நிலை தொடர்வதால், இந்தியா தன்னிறைவு நோக்கி முன்னேறும்.
அமெரிக்காவிற்கு இந்திய விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்திய விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். மசாலா, டீ, காபி, தேங்காய், தேங்காய் எண்ணெய், பாக்கு, முந்திரி, தாவர மெழுகு, அவகாடோ, வாழை, கொய்யா, மாம்பழம், கிவி, பப்பாளி, அன்னாசி, காளான், சில தானியங்களும் இந்த ஏற்றுமதியில் அடங்கும்.
அதிகமாக இருந்த ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டுள்ளதோடு சிலவற்றுக்கு வரி நீக்கப்பட்டதால் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும். எனவே இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் பெயரில் நடைபெறும் அரசியல் நடவடிக்கை, தர்ணா, போராட்டம், இந்தியா பந்த் ஆகியவற்றிற்கு பாரதிய கிசான் சங்கம் ஆதரவு வழங்கவில்லை என்றார்.
மேலும்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
-
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை
-
அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
-
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்
-
100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்: ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து!