மன அழுத்தத்தில் இருந்து விடுபட பிதரகட்டே மலையேற்றம்
நெரிசல், எரிச்சல், மன அழுத்தத்தில் இருந்து ஒரு நாள் விடுபட உங்களுக்கு ஏற்ற இடம் பெங்களூரில் இருந்து 65 கி.மீ., துாரத்தில் உள்ள பிதரகட்டே மலை சிறந்த இடமாகும்.
ராம்நகர் மாவட்டம், மாகடியில் உள்ள சாவனதுர்கா மலை பகுதியின் அருகில் அமைந்து உள்ளது பிதரகட்டே மலை. இங்கு மலையேற்றம் செய்வது சுலபமாக இருக்கும். உங்கள் குழந்தைகளையும் அழைத்து வரலாம். முன்னதாக எத்தனை பேர் செல்கிறோமோ அத்தனை பேருக்கும் ஆன்லைனில் புக்கிங் செய்ய வேண்டும் அல்லது நேரடியாக சென்று டிக்கெட் பெற வேண்டும்.
மரப்பூங்கா குறிப்பிட்ட நாளில் நமது பயணத்தை துவக்கலாம். சாவனதுர்கா மலை அருகில் கெம்பே கவுடா மரப்பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் வனத்துறை அலுவலகம் உள்ளது. அவர்களிடம் மலையேற்றம் செல்வதற்கான அனுமதி சீட்டை காண்பித்து, அதன் பின், மலையேற்றத்தை துவக்க வேண்டும்.
அங்கிருந்து ஐந்து நிமிடம் நடந்து சென்றால், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி உள்ளது. அங்கு மூன்று வழிகள் தென்படும். வந்த பாதையில் இருந்து நேராக செல்லும் பாதையில் செல்ல வேண்டும். சிறிது துாரம் சென்றதும் மூங்கில் மரங்கள் காணப்படும். அதன் அருகில் சிறிய ஏரி உள்ளது. அந்த ஏரியின் அருகில் சிறிய ஒத்தையடி பாதை செல்லும். அந்த பாதை வழியாக நடந்தால், பெரிய நிலப்பரப்பு வரும். இதை, 'கெம்பம்மனே சொனே' என்று அழைக்கின்றனர். அங்கிருந்து பார்த்தால், அருகில் உள்ள சாவனதுர்கா மலை தெரியும்.
மலைப்பகுதியில் காணப்படும் பாறைகள் மீது தான் நடந்து செல்ல வேண்டும். வெயில் காலமாக இருந்தாலும் பாறைகள் வழுக்கும். எனவே ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். சிறிது துாரம் சென்றால், மூன்று குளங்கள் காணப்படும். அங்கிருந்து சிறிது துாரம் சென்றால், மலை உச்சியை அடையலாம். மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து உச்சியை அடைய ஒன்றரை மணி தேவைப்படும்.
கைலாச துவாரகை மலையில் உள்ள கோட்டையின் மேற்கு பகுதியில் நுழைவு வாயில் அமைந்து உள்ளது. அனைத்தும் பாழடைந்து காணப்படுகிறது. இதை, 'கைலாச துவாரகை' என்று அழைக்கின்றனர். கோட்டை சுவரின் தெற்கு பகுதியில் பெரிய கண்காணிப்பு கோபுரம் உள்ளது. இங்கிருந்தபடி ராம்நகர் டவுன், நாயகனபாளையா ஏரியை பார்க்கலாம். மலை உச்சியில் சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டு உள்ளது.
கோட்டைக்குள் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட நந்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். அதுபோன்று 16ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டையையும் காணலாம். இது பாழடைந்து காணப்படுகிறது.
பெங்களூரில் இருந்து செல்வோர், அதிகாலை 4:30 மணிக்கு உங்கள் பயணத்தை துவங்க வேண்டும். காலை 6:00 மணிக்கு உங்கள் பயணத்தை துவக்கினால், 7:30 மணிக்கு மலை உச்சியை அடையலாம். அப்போது தான் சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.
- நமது நிருபர் -
மேலும்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு
-
வங்கக்கடலில் வரும் 15ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு; நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்