முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது: ராகுல் ஒரு முதிர்ச்சியற்ற பகுதிநேர அரசியல்வாதி. நேற்று அவர் அவையில் கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அவையில் ராகுல் குற்றச்சாட்டுகள்!
* தொழிலதிபர் அனில் அம்பானி ஏன் சிறையில் இல்லை. எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் அவரது பெயர் இடம்பெற்று உள்ளது.
* இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் ராகுல் லோக்சபாவில் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு தான் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் vs பிரகலாத் ஜோஷி
பார்லி வளாகத்தில் நேற்று மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் சென்று ராகுல் செய்த செயல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ராகுல் ஜாலியாக, ‛‛வாருங்கள்.. நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம். ஒன்றாக பேட்டிக்கொடுப்போம்'' என்று கூறினார். ஆனால், அவர்கள் விலகி சென்றனர். ஆனாலும் ராகுல், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கையை பிடித்து இழுத்தார்.
கோபத்துடன் அங்கு இருந்து பிரகலாத் ஜோஷி புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதிர்ச்சியில்லாமல் பேசுவது பிஜேபி அமைச்சர்கள்தான் ... ராகுல் அல்ல
ராகுல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தாலும், ஒழுக்கமான அரசியல் வாழ்க்கையில் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். மறைந்த ஷீலா தீட்சித், ராகுல் அரசியலில் ஒருபோதும் முதிர்ச்சியடைய மாட்டார் என்று சரியாகவும், புத்திசாலி தனமாகவும், தெளிவாகவும் கூறினார். இந்திய நாடாளுமன்றத்திலும், வெளிநாடுகளில் உயர் பிரமுகர்கள், கல்வியாளர் கல்வியாளர், பொருளாதார வல்லுநர்கள் போன்றோர் முன்னிலையில் நடைபெறும் மாநாடுகள் மற்றும் கூட்டங்களிலும் அவருக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. அவரது தகுதியின்மை குறித்து பல முறை தன்னை நிரூபித்தபோது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற மதிப்புமிக்க பதவி அவருக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்று நான் ஆச்சரியபடுகிறேன். 2029 மக்களவைத் தேர்தல் வரை அவர் இந்தப் பதவியைத் தொடர்ந்தால், காங்கிரஸ் இரட்டை இலக்க இடங்களை எதிர்பார்க்க முடியாது, ஏனெனில் அந்த நேரத்தில் அக்லேஷ் மற்றும் ஸ்டாலினும் கூட தேசியக் கட்சியிலிருந்து விலகியிருப்பார்கள்.
பத்து கேள்வி கேட்கும்..அதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியுமா.. அதுக்கு சிலது முட்டு வேற
Sad to see Parliament proceedings being held hostage by Opposition MPs. Crores of taxpayers money are spent to run Parliament, to pass crucial laws and debate key national issues. Disruptions only derail democracy and waste public funds. Shame on Congress.
இப்படியே ஒருத்தர ஒருத்தர் குற்றம் குறை சொல்லி கொண்டே இருங்கள். நாட்டு பிரச்னை மக்கள் பிரச்னை பற்றி ஒரு போதும் யோசித்து செயல் படம் நேரத்தை போக்கி பெட்டி வாங்கிட்டு சந்தோஷமா இருங்கள்
கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டார்கள் ..கேள்வி கேட்ட ஆளை திட்டுவாங்க..
சரி பெண் காங்கிரஸ் MPகளுக்கு பயந்து ஓடும் PM என்ன full time அரசியல் வியாதியா
பார்லிமென்ட் உள்ளேயும் வெளியேயும் பாஜக எம் பிக்கள் மற்றும் மந்திரிகள் உஷாரா இருக்கணும்.
அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாத அரசியவாதிகள் இருக்கிறார்களே.
கேள்விக்கு பதில் சொல்ல முடியாது தூரமேமேலும்
-
விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
நல்வழிப்பாதையில் நக்சலைட்டுகள்
-
மீண்டும் பொய்யை பரப்புகிறார் ராகுல்; மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ஜாதியை கேட்டதாக குற்றச்சாட்டு; பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கு பாப்பையா ஆதரவு
-
பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்; டிஏசி ஒப்புதல்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு