சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்

7



புதுடில்லி: சபாநாயகர் ஓம்பிர்லாவை காங்கிரஸ் எம்பிக்கள் திட்டியதற்கான வீடியோ ஆதாரத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டு உள்ளார்.


லோக்சபாவில் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுலுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.


இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, '' காங்கிரஸ், தங்கள் எம்பிக்களின் இழிவான நடத்தையை பற்றி பெருமை கொள்கிறது. அனைத்து பாஜ எம்பிகளையும் தடுத்து நிறுத்தி வைத்துவிட்டு அங்கு இருந்த, காங்கிரஸ் எம்பிக்களை பாஜ பெண் எம்பிக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால், மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். பார்லிமென்ட்ன் கண்ணியம், புனிதத்தை காப்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.'' எனக் குற்றம்சாட்டி இருந்தார்.


இந்நிலையில், இன்று கிரண் ரிஜிஜூ அதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார். சுமார் 9 நொடிகள் ஓடும் வீடியோவை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் எம்பிக்கள் 20 - 25 பேர் சபாநாயகரை அவரது அறையில் சூழ்ந்து கொண்டு மோசமாக திட்டியதுடன், பிரதமருக்கு மிரட்டல் விடுத்த போது, எம்பி ஒருவர் சட்டவிரோதமாக எடுத்த வீடியோ. விவாதம் மற்றும் ஆலோசனையில் பாஜவுக்கு நம்பிக்கை உள்ளது. மிரட்டல் விடுப்பதில் நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாக பேசுவதும், மறுபுறம் கிரண் ரிஜிஜூ தலைமையில் பாஜ எம்பிக்கள் அமைதியாக இருப்பதும் இடம்பெற்றுள்ளன.


வீடியோவை பார்க்க:



@twitter@https://x.com/KirenRijiju/status/2021812385460420837twitter

Advertisement