ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
புதுடில்லி: ராகுலின் எம்பி பதவியை பறிப்பதுடன், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கூறி லோக்சபாவில் நோட்டீஸ் அளித்துள்ளதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.
லோக்சபா நேற்று கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் முன்வைத்தார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினரும் விமர்சித்ததால் சபையில் அனல் பறந்தது.'அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, பாரத மாதாவை அந்நாட்டிற்கு மத்திய அரசு விற்றுவிட்டது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ் சாட்டியதால், பா.ஜ.,வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவருக்கு உடனடியாக பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், பாஜ எம்பி நிஷிகாந்த் துபே ,' லோக்சபாவில் எந்த ஆதாரமும் இல்லாமல் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் சுமத்தி உள்ளதாகவும்,அவரது பதவியை பறிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் கொண்டு வந்துள்ளேன்.
வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், ராகுலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அவரது சகோதரியும், வயநாடு தொகுதி எம்பியுமான பிரியங்கா கூறியுள்ளார்.
இவர் வெளிநாடுகளுக்கு வேலை செய்கிறார் யார் என்று தெளிவாக சொல்ல முடியும் முஸ்லீம் இவரை நம்புவது கேனை தனம்
பேசாமல் பாகிஸ்தான் அல்லது இத்தாலி பிரதமர் ஆக்கி விட்டால் அமைதி ஆயிடுவார்
நம் நாட்டில் மட்டும் அல்ல உலகத்திற்கே தெரியும்!
என்ன தெரியும், இந்திய பாராளுமன்றத்தில் ராகுல், எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு பாஜாகவால் பதில் சொல்லத்தெரியல, கூட்டத்துக்கு பிரதமரே போறதில்லை என்றுதான் உலகம் பார்த்துக்கொண்டு இருக்கு, நம்பாட்டில் இணையங்களை தேடிப்பாருங்க,மேலும்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்