கணவர் வீட்டு முன் மனைவி தர்ணா

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே கணவர் வீட்டு முன்பு மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கா ட்டுமன்னார்கோவில், உடையார்குடி மேல வீதியை சேர்ந்தவர் சிவக்குமார், 42; இவரது மனைவி மதுரையை சேர்ந்த பிரியா,40; திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. சிவக்குமார் உடல்நிலை பாதிப்பு உள்ளவர் என கூறப்படுகிறது. இதனை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக மாமியார் ஜோதிலட்சுமி மற்றும் சிவக்குமாரின் தம்பி அருண்குமாரிடம் பிரியா கேள்வி எழுப்பினார். இதனால் சிவக்குமார் வீட்டினர், பிரியாவை புற க்கணித்தனர். இதனால் குடும்ப பிரச்னை அதிகரித்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்னையில், சிவக்குமாரின் தம்பி அருண்குமார் பிரியாவை தாக்கி, வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியா கணவர் வீட்டின் முன் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் விரைந்து வந்து பிரியாவை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து, ஜோதிலட்சுமி மற்றும் அருண்குமார் ஆகிய இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தபடியே போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement