தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: மத்திய பட்ஜெட்டை கண்டித்து சிவகங்கையில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமை வகித்தார்.

காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் முன்னிலை வகித்தார். காங்., நகர் தலைவர் விஜயகுமார், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் மருது, மார்க்சிஸ்ட் பொதுக்குழு விஸ்வநாதன் உட்பட ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் பங்கேற்றனர்.

சிங்கம்புணரி: தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். காங்., முன்னாள் எம்.எல்.ஏ., அருணகிரி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து முன்னிலை வகித்தனர். துணை தலைவர் செந்தில், ஒன்றிய துணை செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காரைக்குடி: நகர் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். காங்., எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் மனோகரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement