அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி: ராமதாஸ்
''அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: பா.ம.க., அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, அன்புமணியை நீக்கி விட்டோம். அவருடன் இருக்கும் கூட்டத்தினர், பொய் சொல்வதையே அரசியலாகக் கொண்டு செயல்படுகின்றனர்; என் மனம் புண்படும்படி ஏளனமாக பேசி வருகின்றனர்.
என்னை பற்றி மட்டுமில்லாமல், 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்த பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் வசை பாடுவதை தொழிலாக செய்து வருகின்றனர். அரசியலில் இருந்து என்னை ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், எதை எதையோ பேசுகின்றனர்.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு, எனக்கு எதிராகச் செயல்படுகின்றனர். அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷனே வழக்கு போடுவது, வேடிக்கையிலும் வேடிக்கை. இதை கண்டு நீதிபதியே வியந்து விட்டார்.
டில்லி உயர் நீதிமன்றம் இரண்டு முறை எனக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக, அன்புமணி தரப்பினர் பொய்களை பரப்பி வருகின்றனர். தேர்தல் கமிஷன் சரியான திசையில் செல்லவில்லை; திரும்ப திரும்ப தவறு செய்கிறது. இதை, நீதிமன்றத்திலேயே சொல்லி விட்டோம். இதில், பா.ஜ.,வை குறை கூற விரும்பவில்லை.
பா.ம.க., உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி மிகவும் குழம்பி போய் இருக்கிறார்; இப்போது ஊடகங்களையும் குழப்பி வருகிறார். சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி நாங்கள் பேசி வருகிறோம்; விரைவில் முடிவை வெளியிடுவோம். 'அய்யா பா.ம.க.,' என்ற பெயரில் கட்சி துவங்கப்பட்டது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர் --
இருக்கிறது பத்தாதுன்னு இன்னொரு காமெடி பீஸு...
பா.ம.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்பு மணியை நீங்கள் நீக்கிவிட்டு என்னை அரசியலில் ஒழிக்கப் பார்க்கிறார்கள் என புலம்பி என்ன பயன்? தி.மு.க, கோ.க இருவரையும் நம்புவதை விட்டு, விட்டு அன்புமணியுடன் சமாதானமாக செல்ல முயலுங்கள். யார் பேச்சையோ கேட்டு நீதி மன்றம், அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம் என எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் அய்யா. இனியும் நீங்கள் தி.மு.கவை நம்பினால் எதோ அப்பத்தை பங்கு வைத்த கதைதான்.
ராமதாஸை அரசியலில் இருந்து அவருடைய மகன் அன்புமணி ஏற்கனவே ஒழித்துக்கட்டியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
உங்கள் செயல்பாடு தான் உங்களை ஒழித்துக் கட்டுகிறது.
அவ்வளவு தான், மாம்பழம் 'அழுக' ஆரம்பித்து விட்டது...வருத்தம் அளிக்கிறதுமேலும்
-
மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'
-
பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கம்; செய்ய வேண்டியதை பட்டியலிட்ட தலைமை
-
மயிலம் கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கல்
-
கட்சி என்ற பெயரில் 'வாட்ஸ் ஆப்' குழு நடத்தி வருகிறார் விஜய்: அ.தி.மு.க.,
-
விருதையில் ஆர்ப்பாட்டம்
-
'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல' உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு