'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல': உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு
புதுடில்லி: 'ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சொந்த சொத்து அல்ல என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல், டிஷ்நெட் ஒயர்லெஸ், ஏர்செல் செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு திவால் தீர்வு நடைமுறையைத் துவங்குமாறு, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திடம் விண்ணப்பித்திருந்தன.
இவை, கடந்த 2006ம் ஆண்டில், அரசு ஏலம் வாயிலாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களையும், பல சேவைகளையும் வழங்குவதற்காக 'யுனிபைடு ஆக்ஸஸ் சர்வீஸ்' உரிமங்களையும் பெற்றிருந்தன. இவ்வழக்கு விசாரணையின்போது, அலைக்கற்றை உரிமங்கள், அந்நிறுவனங்களின் சொத்தாக கருதப்பட்டன.
இதை மத்திய அரசு எதிர்த்தது. அலைக்கற்றை என்பது பொதுவான இயற்கை வளம் என்பதுடன், அதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சொத்தாகக் கருத முடியாது என்றும் வாதிட்டது.
திவால் நடைமுறை தொடர்ந்தாலும், நிறுவனங் கள், அலைக்கற்றையை தொடர்ந்து பயன் படுத்தலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கை, மத்திய அரசு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு எடுத்துச் சென்றது. தீர்ப்பாயமோ, 'அலைக்கற்றை என்பது பொதுச் சொத்துதான்.
'இருப்பினும், அது, உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களின் புலனாகாத சொத்தும் ஆகும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நிலுவைத் தொகையை செலுத்தாமல் அலைக்கற்றையைப் பயன்படுத்த முடியாது' என்று கூறிவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
திவால் நடவடிக்கை நடைமுறையில் இருக்கும்போது, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை நிறுவன சொத்தாக கருதப்படாது.
திவால் சட்டம் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி, தொலை த்தொடர்புத் துறைக்கு செலுத்தவேண்டிய உரிமக் கட்டணம், அலைக்கற்றை நிலுவைத் தொகையை தள்ளிப்போடவோ, மாற்றியமைக்கவோ முடியாது.
அலைக்கற்றை, பொது நலனுக்காகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். நிறுவன மறு சீரமைப்பின்போது, அதனைப் பயன்படுத்தி, பொருளாதார பயனடைய முடியாது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் சட்டங்களை மீறி, திவால் சட்டம் செயல்பட முடியாது.
அலைக்கற்றயை பயன்படுத்தி லாபமீட்டத்தான் நிறுவனங்கள் குத்தகை எடுக்கின்றன. ஆனால் செயல்பட முடியவில்லை என்றால் அரசிடம் அலைக்கற்றை தானே போய்விடும். அலைக்கற்றை உரிமம் வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றக்கூடியது அல்ல. அப்படி விட அனுமதித்துத்தான் தீம்க்கா தாவூத் நிறுவனத்துக்கு 5000 கோடி இலவசமாக தீவிரவாதம் செய்ய பணம் கொடுத்தது.
2கி ஊழலில் திளைத்த திமுகவிற்கு என்று தண்டனை தர போகிறீர்கள்மேலும்
-
ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
-
சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
-
விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
-
புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?
-
நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
-
துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...