மயிலம் கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கல்

மயிலம்: மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழாவில் இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் வேங்கடசுப்ரமணியம் இலவச லேப்டாப்களை 183 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி பேசினார். நிகழ்ச்சியை உதவி பேராசிரியை வள்ளி தொகுத்து வழங்கினார்.

கல்லுாரி துறை தலைவர்கள் உதவி பேராசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement