200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில், பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களை சேர்ந்த, 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: பெண்கள் கர்ப்பம் அடைந்தவுடன் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் அதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து பெட்டகம், மகப்பேறு உதவித்தொகைகளை பெறலாம். கர்ப்ப காலத்தில் சத்தான அசைவ உணவு மற்றும் கீரை, காய்கறிகள் மற்றும் இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி மூலம் கர்ப்பிணிகளுக்கு, 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள், புடவை, வளையல்கள், மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள், தாம்பூலம் அடங்கிய சீர்வரிசை தட்டு வழங்கப்படுகிறது.
அதேபோல, குழந்தை பிறக்கும் வரை, அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீடுகளிலோ, யூ டியூப் பார்த்து பிரசவம் செய்வது தவறானது. டாக்டர்கள் கூறும் வழிமுறைகளையும், சத்தான உணவுகளையும் எடுத்து கொண்டால், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தேன்மொழி, நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மகளிருக்கு ரூ.5 ஆயிரம்: எதிர்க்கட்சியினர் சொல்வது என்ன?
-
அதிகாலை நேரத்தில் பயங்கர விபத்து; கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி 7 பேர் பலி
-
ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.3,120 சரிவு
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை... இஸ்ரேலுக்கு தீராத சந்தேகம்
-
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு