அதிகாலை நேரத்தில் பயங்கர விபத்து; கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி 7 பேர் பலி

7

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சத்யவரா என்ற கிராமப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அது, அந்த வழியாக வந்த சரக்கு லாரி, பைக், கார் மீது அடுத்தத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.


இதில் காரில் பயணித்த 6 பேரும், பைக்கில் பயணித்த ஒருவர் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து அதிகாலை 5:15 முதல் 5:30க்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்தது.

இறந்தவர்கள் அனைவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள். இவர்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement