தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.3,120 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3120 ரூபாய் சரிந்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 11) தங்கம் கிராம், 14,790 ரூபாய்க்கும், சவரன், 1,18,320 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (பிப்ரவரி 12) தங்கம் விலை கிராமுக்கு, 190 ரூபாய் குறைந்து, 14,600 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 1,520 ரூபாய் சரிவடைந்து, 1,16,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3,120 ரூபாய் சரிந்துள்ளது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
அப்பப்ப தெளியவைச்சு தங்கம் அடிக்கும். இது சும்மா டீ பிரேக் தான். அடுத்த சம்மட்டி ரெடி.
தங்கம் விலை குறைந்து பழைய மாதிரி ரூ.50,000 க்கும் கீழே வந்தால் நன்றாக இருக்கும்மேலும்
-
2 ஆண்டுகளில் 532 என்கவுன்டர்... நக்சல்கள் 2700 பேர் சரண்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு குளறுபடியால் பாய்ந்தது நடவடிக்கை; 6 பேர் சஸ்பெண்ட்
-
டில்லியில் பிரமாண்ட ஏஐ மாநாடு; பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பட்டியல் இதோ!
-
முன்கூட்டியே ரூ.5 ஆயிரம் வினியோகம்: சதியை உணர்ந்து செய்தோம் என்கிறார் ரகுபதி
-
ஏர் இந்தியாவுக்கு ரூ.1 கோடி அபராதம்; தகுதிச்சான்று இன்றி வானில் பறந்ததால் நடவடிக்கை
-
ஜார்க்கண்டில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் தாக்குதல்; 6 பேர் பலி