ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் கல்யாணசுந்தரம், மாநில துணைத்தலைவர் தினேஷ், நிர்வாகிகள் நந்தகுமார், ஜெகதாம்பிகா, பெருமாள், கோவிந்தராஜ், காந்திமதி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும். கான்ட்ராக்ட், அவுட்சோர்ஸ், தினக்கூலி போன்ற வேலைவாய்ப்பை நிறுத்தம் செய்து, மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும், முறையாக ஊதிய விகிதங்களில் நிரப்ப வேண்டும். இ.பி.எஸ்., 95ன் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். ஓய்வூதிய சட்டம், 2025ஐ ரத்து செய்து, ஓ.பி.எஸ்.,ன் கீழ், ஓய்வூதியதாரர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், அரசுத்துறைகளின் அளவை குறைத்தல் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை
எழுப்பினர்.
மேலும்
-
மகளிருக்கு ரூ.5 ஆயிரம்: எதிர்க்கட்சியினர் சொல்வது என்ன?
-
அதிகாலை நேரத்தில் பயங்கர விபத்து; கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி 7 பேர் பலி
-
ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.3,120 சரிவு
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை... இஸ்ரேலுக்கு தீராத சந்தேகம்
-
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு