பிளவுபடுத்தும் அரசியலை செய்யும் ராகுல்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடல்
புதுடில்லி: ''தவறான தகவல்களை பரப்புவது, நாடகங்களை அரங்கேற்றுவதை தவிர ராகுல், காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை. பிளவுபடுத்தும் அரசியலை ராகுல் செய்கிறார்'' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியா நமது விவசாயிகளின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. விவசாயிகளின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன. தவறான தகவல்களை பரப்புவது, நாடகங்களை அரங்கேற்றுவதை தவிர ராகுல், காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை.
பிளவுபடுத்தும் அரசியலை ராகுல் செய்கிறார். அவர்கள் நமது விவசாயிகளின் உண்மையான கவலைகளை நிவர்த்தி செய்ய எதுவும் செய்யவில்லை, இந்தியாவின் உலகளாவிய சாதனைகளை மீண்டும் மீண்டும் குறைத்து மதிப்பிடவும், மக்கள் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயற்சி செய்கின்றனர்.
இவர்களது நாடகம் தேசத்திற்கு மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் தனது தவறை சரிசெய்ய மறுக்கிறது, வளர்ச்சியை விட பிரிவினையை விரும்புகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது. நமது தேசமும், மக்களும் எப்போதும் முன்னேறுவார்கள். வலிமையானவர்கள், தன்னம்பிக்கை கொண்டவர்கள். உலகளவில் மதிக்கப்படுவார்கள். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
நீங்க எதிர்க்கட்சியா இருந்த போது இதே மாதிரி வேலைகளைத்தான் செய்தீர்கள்.செய்வீர்கள்.
வங்காள வீராங்கனை பாராளுமன்றத்தில் கர்ச்சித்தபோது நடந்தது இப்போது ராகுல் பேசும்போது நடக்கிறது. குற்றசாட்டுகளை சந்தித்து விளக்கம் அளிக்க திராணி இல்லாதவர்கள் இப்படி பொய்ப்பழி சுமத்தி பதுக்குகிறார்கள்.
வடஅண்ணாமலை அறிக்கை விடுகிறார். கோழைகள். ராகுலை பேசவிட்டு அதன்பிறகு அவர் பேசியதை தவறு என்ன என்பதை சுட்டிக்காட்டிவிட்டு இப்போது அறிக்கை விடலாம்.
ராகுல் ஆதாரத்துடன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் வலம் வரும் அமைச்சர்கள், பரிதாபம். நாட்டின் துரதிர்ஷ்டம்.
புருடா விடுவதில் மகேந்திரன்
அவன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் கூற எழும்போதே இவன் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என தலைதெறிக்க வெளியில் ஓடிவிடுகிறான், அவர்களும் ஓடாதே ஓடாதே பதிலை கேள் என சொல்லியும் ஓடுகிறான். அவனுக்கும் தெரியும் தேரை அவிழ்த்து தெருவில் விட்டுவிடுவார்கள் என்று, அவனை விடுங்கள், இது போன்ற தருதலைகளுக்கு முட்டுக்கொடுக்கும் உங்களைபோன்றவர்களை என்னவென்று சொல்வது?
நல்லவே ஜோக் அடிக்கிறார் பிரதான். பிளவு படுத்தும் அரசியல் ஒன்றுதான் பாஜகவின் ரத்தத்தில் ஊறியுள்ளது. ராகுல் இல்லாவிட்டால் இவர்கள் எப்போதோ நாட்டை தாரை வார்த்துவிட்டு நம்மை அடிமை படுத்திவிட்டு இவர்களும் அடிமையாக போயிருப்பார்கள்.
ராகுல் போன்ற அறிவிலிகள் நாட்டை முன்னேற விடாமல் தடுக்கும் கயவர்கள்..புருடா விடுவதில்
மகேந்திரா நாட்டை விக்குறதுன்னா என்னா? கொஞ்சம் சொல்லேன். உனக்கு தெரிஞ்சது என்னா ன்னு நாங்க தெரிஞ்சுக்குறோம். பிளீஸ் நீ அவசியம் இந்த தளத்தில் சொல்லோணும். டமில் நாட்டை திருட்டு தீயமுக காரனுக்கு விக்குறானுங்கன்னு ரொம்ப வருஷமா ஒரு கதை உலாவி கிட்டு இருக்கு. நீ சொன்னதுக்கு அப்பறம் எவன் உண்மையா விக்குறான் எப்படி விக்குறான் னு ஒரு அனாலிஸிஸ் பண்ணி நாங்க நல்லா தெரிஞ்சுக்குறோம். சும்மா வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு பேசப்புடாது.
ராகுல் மாதிரி அரசியல் வாதிகள் சமாளிப்பது இந்த தேசத்தின் துரதிர்ஷ்டம்
அப்புறப்படுத்தவேண்டும்.
This fellow Raghul to be sent to Italyமேலும்
-
அமன்பிரீத் சிங் 'தங்கம்': ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
இந்திய பாரா நீச்சல் வீரர் சாதனை
-
அடுத்த 5 ஆண்டுகள் கொள்ளையடிக்க திமுகவினர் துடிக்கின்றனர்; சீமான் குற்றச்சாட்டு
-
2 ஆண்டுகளில் 532 என்கவுன்டர்... நக்சல்கள் 2700 பேர் சரண்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு குளறுபடியால் பாய்ந்தது நடவடிக்கை; 6 பேர் சஸ்பெண்ட்
-
டில்லியில் பிரமாண்ட ஏஐ மாநாடு; பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பட்டியல் இதோ!