டில்லியில் பிரமாண்ட ஏஐ மாநாடு; பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பட்டியல் இதோ!
புதுடில்லி: டில்லியில் நடக்க உள்ள ஏஐ மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் சம்மிட் 2026' மாநாடு, வரும் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், பிப்ரவரி 19ல் பிரதமர் மோடி முக்கிய அமர்வில் உரையாற்ற உள்ளார். திறன் மேம்பாடு, சமூக உள்ளடக்கம், ஏ.ஐ., பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட ஏழு துறைகள் விவாதிக்கப்பட உள்ளன.
மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் பெயர் பின்வருமாறு:
* பூடான் - ஷெரிங் டோப்கே, பிரதமர்
* பொலிவியா - எட்மண்ட் லாரா மொன்டானோ, துணை ஜனாதிபதி.
* பிரேசில் - லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, அதிபர்.
* குரோஷியா - ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக், பிரதமர்.
* எஸ்டோனியா -அலார் கரிஸ், ஜனாதிபதி
* பின்லாந்து - பெட்டேரி ஓர்போ, பிரதமர்
* பிரான்ஸ் -இம்மானுவேல் மக்ரோன், அதிபர்.
* கிரீஸ் - கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், பிரதமர்
* கயானா- பரத் ஜக்தியோ, துணை ஜனாதிபதி
* கஜகஸ்தான் - ஓல்சாஸ் பெக்டெனோவ், பிரதமர்
* மொரிஷியஸ் - நவீன்சந்திர ராம்கூலம், பிரதமர்
* செர்பியா - அலெக்சாண்டர், ஜனாதிபதி
* ஸ்லோவாக்கியா - பீட்டர் பெல்லெக்ரினி, ஜனாதிபதி
* இலங்கை - அனுரகுமார திஸாநாயக்க, அதிபர்.
* சீஷெல்ஸ் செபாஸ்டியன் பிள்ளை, துணை ஜனாதிபதி
* சுவிட்சர்லாந்து- பர்மெலின், ஜனாதிபதி
* நெதர்லாந்து - டிக் ஸ்கூப், பிரதமர்.
*ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியின் பட்டத்து இளவரசர். கூடுதலாக, 45க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் மற்றும் பல சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
கூகுள்' தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, 'ஓபன் ஏ.ஐ.,' நிறுவனர் சாம் ஆல்ட்மேன், 'என்விடியா' தலைவர் ஜென்சன் ஹுவாங், 'டீப் மைண்ட்' தலைவர் டெமிஸ் ஹசாபிஸ், 'மைக்ரோசாப்ட்' தலைவர் பிராட் ஸ்மித் உள்ளிட்ட பல உலக தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா உலக நாடுகளை எல்லாம், எல்லா துறைகளிலும் தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும். அது எவ்வளவு பெரிய பெருமை இந்தியர்களுக்கு. நன்றி பாரத பிரதமர் திரு மோடிஜி அவர்களுக்கு.
மாநாடு வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்மேலும்
-
குவாரி துவங்க கருத்து கேட்பு; வேறு கிராமத்தில் நடத்தாதீங்க!
-
பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
-
ஆன்லைனில் அலுவலக கட்டணம் ஆப்லைனில் அன்பளிப்பு கட்டணம்; தனியார் மருத்துவமனைகளுக்கு சொத்துவரியில் சீரமைப்பு தேவை
-
பெங்களூரு அருகே கோர விபத்து; 6 மாணவர்கள் உட்பட 7 பேர் பலி
-
தயாராகுங்கள் மாணவர்களே!
-
போடி - துாத்துக்குடி பகல் ரயில் சேவை தேவை; சும்மா நிற்கும் பெட்டிகளை கொண்டு இயக்கலாம் பயணிகள் எதிர்பார்ப்பு