அடுத்த 5 ஆண்டுகள் கொள்ளையடிக்க திமுகவினர் துடிக்கின்றனர்; சீமான் குற்றச்சாட்டு

6


சென்னை: 'மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், 5,000 ரூபாய் கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க, தி.மு.க., வினர் துடிக்கின்றனர்' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: தி.மு.க., அரசு, மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில், எந்த மாதமும் இல்லாமல், திடீரென, 5,000 ரூபாய் முன்பணமாக, வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. இவை தேர்தல் வருவதை கணக்கிட்டு, மக்களின் ஓட்டை பறிக்கும் சூழ்ச்சி. நீண்ட நாட்களாக திட்டமிட்டு, மிகவும் ரகசியம் காத்து, ஒரே நாளில், 1.31 கோடி பேரின் வங்கி கணக்குகளில், 5,000 ரூபாய் செலுத்துவதில், நேர்த்தியாக தி.மு.க., அரசு செயல்பட்டுள்ளது.

இத்தனை கவனத்தையும், பொறுப்பையும், சட்டம் - ஒழுங்கை காப்பத்தில் காட்டவில்லை. பல அரசு துறை ஊழியர்கள் பணி பாதுகாப்பு, வாழ்வாதார பாதுகாப்புக்கு போராடி வருகின்றனர். நிதிநிலை காரணம் காட்டி, அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வரும் அரசு, ஒரே நாளில், 6,500 கோடி ரூபாயை வாரி இறைக்க நிதி எங்கிருந்து வந்தது?

பல லட்சக்கணக்கான கோடிகளை, மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, 5,000 ரூபாய் கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க பார்கின்றனர். தி.மு.க.,வின் ஓட்டு பறிக்கும் திருட்டுத்தனத்திற்கு, மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement