அமன்பிரீத் சிங் 'தங்கம்': ஆசிய துப்பாக்கி சுடுதலில்
புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அமன்பிரீத் சிங் (25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்') தங்கம் வென்றார்.
டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்' தனிநபர் பைனலில் இந்தியாவின் அமன்பிரீத் சிங், 589.24 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான குர்பிரீத் சிங் (584.20 புள்ளி), அங்கூர் கோயல் (570.11) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்' அணிகள் பிரிவில் அமன்பிரீத் சிங், குர்பிரீத் சிங், அங்கூர் கோயல் அடங்கிய இந்திய அணி, 1743.55 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது.
பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள் புரோன்' தனிநபர் பைனலில் இந்தியாவின் சிப்ட் கவுர் சாம்ரா (623.2 புள்ளி) வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த் (621.0) வெண்கலம் கைப்பற்றினார். இதன் அணிகள் பிரிவில் சிப்ட் கவுர், தேஜஸ்வினி, மணினி கவுசிக் அடங்கிய இந்தியா, தங்கத்தை தட்டிச் சென்றது.
சீனியர் பிரிவில் 33 பதக்கம் (13 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம்) வென்ற இந்தியா, ஒட்டுமொத்தமாக 51 தங்கம், 23 வெள்ளி, 20 வெண்கலம் என 94 பதக்கத்தை தட்டிச் சென்றது.
மேலும்
-
மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'
-
பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கம்; செய்ய வேண்டியதை பட்டியலிட்ட தலைமை
-
மயிலம் கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கல்
-
கட்சி என்ற பெயரில் 'வாட்ஸ் ஆப்' குழு நடத்தி வருகிறார் விஜய்: அ.தி.மு.க.,
-
விருதையில் ஆர்ப்பாட்டம்
-
'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல' உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு