புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் மோடி

புதுடில்லி: டில்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் செயல்பட உள்ளது.


2014 ல் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்ற பிறகு, காலனித்துவத்துக்கு அடையாளமாக விளங்கும் சின்னங்களையும், மக்கள் மனதில் உள்ள அடிமைத்தன எண்ணங்களை மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.


இதன்படி, மத்திய அமைச்சரவை செயலகமானது கர்தவயா பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜபாதை சீரமைக்கப்பட்டு கர்தவயா பாதை என பெயர் சூட்டப்பட்டது. ரேஸ் கோர்ஸ் சாலைக்கு லோக் கல்யாண் மார்க் எனவும், கவர்னர் மாளிகைகள் லோக் பவன்கள் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.


இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1900ம் ஆண்டில் அவர்களது தலைமைச் செயலகம் டில்லி சவுத் பிளாக்கில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை பிரிட்டன் கட்டட கலைஞர் ஹெர்பெர்டி பாகர் வடிவமைத்தார். இந்த கட்டடத்தில் பிரதமர் அலுவலகம், ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்பட்டனன.


இந்த அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள ' சேவா தீர்த்' என்ற புதிய இடத்துக்கு இடம் மாறின. இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலக புதிய கட்டடம் மற்றும் மத்திய செயலக கட்டடமான கர்தவயா பவன் 1 மற்றும் 2 ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

கடந்த 1921 முதல் சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலி செய்யப்படுகின்றன. பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

Advertisement