தொழிலதிபர் வீடு முன் துப்பாக்கிச்சூடு கோகி கும்பலை சேர்ந்த ரவுடி கைது

புதுடில்லி,:தொழிலதிபர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில், கோகி கும்பலை சேர்ந்த ரவுடி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த, 2023 நவம்பர் மாதத்தில், டில்லியின் வசீராபாத் பகுதியில் உள்ள தொழிலதிபர் வீடு முன், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

தொழிலதிபரை மிரட்ட நடத்தப்பட்ட அந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த போலீசார், கையால் எழுதப்பட்ட துண்டு காகிதம் ஒன்றை சம்பவ இடத்திலிருந்து மீட்டனர்.

துப்பாக்கிச்சூடு அதில், அந்த தொழிலதிபரிடம், 50 லட்ச ரூபாய் கேட்டு, கோகி என்ற பிரபலமான ரவுடி கும்பலை சேர்ந்த அன்குஷ் சோப்ரா, 25, என்பவர் எழுதிய கடிதம் என தெரிந்தது.

மோட்டார் பைக்கின் பின்புறத்தில் இருந்த நபர் தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதை அறிந்த போலீசார், அந்த நபர் தான் அன்குஷ் சோப்ரா என்பதை கண்டறிந்தனர்.

கடந்த மூன்றாண்டு களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சோப்ரா, நேற்று காலையில் போலீசில் சிக்கினார். டில்லியின் மவுஜ்பூர் என்ற இடத்தில் உள்ள சாஸ்திரி மார்க் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடித்து, விசாரிக்கின்றனர்.

தொழிலதிபர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, அவருடன் இருந்த மணிஷ் என்பவரும் போலீசில் சிக்கியுள்ளார்.

சிறை இவர், குற்றச் செயல்களில் சிறார்களை ஈடுபடுத்திய செயலுக்காக, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவரும், கோகி என்ற பிரபலமான ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்து, விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

Advertisement