ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?
திருப்பூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியில் வசிக்கும் மக்கள், தங்களின் மருத்துவ தேவைக்கு, அவிநாசி அல்லது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கே சென்று வருகின்றனர். எனவே, 'பூண்டி நகராட்சியை மையப்படுத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதன் மூலம் பழங்கரை துவங்கி, ராக்கியா பாளையம், பூண்டி சுற்று வட்டார பகுதி மக்கள் பயன் பெறுவர் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், நகராட்சி சார்பில், 2022 - 2023ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானிய நிதியில், பெரியாயிபாளையம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
கட்டுமானப்பணி முடிந்து மாதங்கள் பல கடந்தும், இனி பொதுமக்கள் பயன்பாடுக்கு திறக்கப்படாமல் இருக்கிறது.'விரைவில் திறப்பு விழா நடத்தி, பொதுமக்கள் பயன்பாடுக்கு கொண்டு வர வேண்டும்' என, நகராட்சி நிர்வாகம் சார்பில், வட்டார மருத்துவ அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
மருத்துவ துறையினர் கூறுகையில், 'சட்டசபை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதற்குள்ளாக அரசின் முடிவுற்ற திட்டப்பணிகளை மக்களுக்கு வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அந்த வகையில், உள்ளூர் அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கள் முன்னிலையில் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது,' என்றனர்.
மேலும்
-
உலக அளவில் இந்திய ரயில்வேக்கு 2ம் இடம்; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
விஜய் கூட்டத்தில் பலியானவரின் உடலை பெற மறுத்து முற்றுகை!
-
விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தை: உறுப்பு தானத்தால் 5 பேருக்கு கிடைத்தது மறுவாழ்வு
-
மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
சென்னையை மகிழ்விக்கும் சித்திரக்கதை நாயகர்கள்
-
தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்