தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

18

சென்னை: தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு பெற்றோர் அழைத்து வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

,இதுகுறித்து அவரது எக்ஸ் வலைதள பதிவு;

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்.

கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

ராமநாதபுரம் - நாவாய், ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement