தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்
சென்னை: 'தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும்' என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீ திமன்றம் தெரிவித்து உ ள்ளது.
தி ருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு என்ற பெயர், ஜாதியை முன்னிலைப்படுத்தும் வகையில் உள்ளதால், அதை தாய் -தந்தை கோவில் தெரு என மாற்ற உத்தரவிடக் கோரி, அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.வெங்கடேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற மனுதாரரின் முயற்சி பாராட்டத்தக்கது. எனினும், அவர் விருப்பப்படி தெருவுக்கு பெயர் வைக்க வேண்டும் எனக் கோருவதை ஏற்க முடியாது' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, வெங்கடேஷ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு , 'தெருவுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
' மனுதாரரின் ஆலோசனையை அரசின் சட்டப்பூர்வ கடமையாகக் கருத முடியாது என்பதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செ ய்து உத்தரவிட்டது.
இன்னும் மக்கள் பழைய தெரு பெயரை சொல்லித்தான் அடையாள படுத்து கிரார்கள்....
செட்டியார், ரெட்டியார், முதலியார், ஐயர், மார்வாடி, சிங், ஆசாரி போன்றவைகள் எல்லாம் ஜாதி பெயரை குறிப்பிட இல்லை. மதிப்புடனும் மரியாதையுடனும் வயதில் அல்லது தொழிலில் பெரியவர் என்பதற்காக அவர் பெயரைச் சொல்லாமல் கூறப்படும் மரியாதையான சொற்கள்.
குப்பன், சுப்பன் போட்ட வழக்குகள் கிடப்பில்.. எப்படி இதுபோன்ற வழக்குகளை எடுத்த்துக் கொள்கிறது கோர்ட்? ரொம்ப முக்கியம்??
தெரு பெயரை மாற்றினால் பிறகு ரேஷன் கார்டு ஆதார் கார்டு வோட்டர் id பாஸ்போர்ட் வீட்டு பத்திரம் பான் கார்டு வீட்டு மனை பட்டா என்று மொத்தமாக எல்லாமே மாற்றானும் .....இதெல்லாம் இவனுங்க அப்பனா வந்து மாற்றி கொடுப்பான்?? ....
இது வேண்டாம் என்றால், ஜாதிவாரி இட ஒதுக்கீடு எதற்கு? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வைக்கலாமே
ஜாதி பார்த்துதான் பகுதி செயலாளர் வட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் மந்திரி ஊராட்சி கவுன்சிலர் என்று கட்சி பதவிகள் .....ஆனால் இவனுங்கதான் தெரு பெயரில் ஜாதி இருக்கக்கூடாதாம் ....பெரிய யோக்கியனுங்க ....சைதாப்பேட்டையில் செட்டி தெரு உள்ளது ....அங்கே என்ன தினம் தினம் ஜாதி தகராறு நடக்குதா ??......
இதெல்லாம் ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டு செய்யவேண்டியவேளை .
ஜாதி கொடுக்கும் சலுகை வேண்டும் - ஆனால் ஜாதியை பெயரிலோ அல்லது இடத்திலோ இணைக்கக்கூடாது என்று சொல்வது வன்மம். அவரவர் விருப்பத்துக்கேற்ப போட்டுக்கொள்ளலாம். அதே போல ஒரு குறிப்பிட்ட ஜாதியை தொடர்ந்து பழித்து வருவது சட்ட விரோதம் - கிரிமினல் குற்றம்.
அது என்ன, ‘தாய், தந்தை தெரு’? இவருடைய அம்மா, அப்பாவுக்கு மதிப்பளிப்பதற்காக இந்தப் பெயரை? அபத்தமாக உள்ளது
தெரு ஊர் முதல் பெயரை இணைத்து புது பெயர் வைக்க வேண்டும். சைதாப்பேட்டை அண்ணாதுரை பேட்டை என்றால், அதன் பெயர் சைதாப்பேட்டை - அண்ணாதுரை பேட்டை. ஆகவே மவுண்ட் ரோடு முன் அழகை வீதி என்று பெயர் இருந்தால், அழகை வீதி - அண்ணா சாலை என்று இருக்க வேண்டும். புது தெரு, புது ஊருக்கு முதல் குடியேறியவர் பெயர். தெரு ஊர் பெயர் மாற்ற சட்டம் தேவை. ஒரு தெரு வாணிப செட்டியார் என்று இருந்து வாணிபர் தெருவாக மாற்றி தற்போது வன்னியர் தெரு என்று மருவி உள்ளது. அதில் அருகில் உள்ள மசூதி பெயரை இணைத்து சிலர் கடை முகவரி எழுதி உள்ளனர். அரசு வைத்த பெயரை மாற்றினால் அரசு சேவை நிறுத்த வேண்டும்.மேலும்
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ
-
திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
-
காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்