உண்டியலில் கைவரிசை அறநிலையத்துறை அவசியமா?

சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் தங்க நகைகள் திருடு போய் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோவிலில், கோவில் செயல் அலுவலர், தங்கக் காசுகள் மற்றும் பணத்தை திருடி உள்ளார்.

இது குறித்து வழக்கு பதிந்த பிறகும், குற்றவாளியை காவல் துறையே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் பணியாளர்கள் இருவர், 1.25 லட்சம் ரூபாய் உண்டியல் பணத்தை திருடி உள்ளனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில், செயல் அலுவலர், தங்கக் காசுகளை திருடி, தலைமறைவாகியுள்ளார். அறநிலையத்துறை ஊழியர்களே, கோவில் உண்டியல் பணத்தை திருடுவதால், அறநிலையத்துறை அவசியம் தானா?' என கேள்வி எழுகிறது.

உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பலர், தண்டனை பெறாமல் காப்பாற்றப்படுவது, சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

எனவே, ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில், கோவில்களில் உண்டியல் எண்ணும் பணியை நடத்த வேண்டும்.

- காடேஸ்வரா சுப்ரமணியம்,

தலைவர், ஹிந்து முன்னணி.

Advertisement