மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு
மும்பை: மும்பையில் மெட்ரோ கட்டுமான பணியின் போது, தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. முலண்ட் எல்பிஎஸ் சாலையில் இந்த திட்டத்திற்காக அதி உயரம் கொண்ட சிமெண்ட் தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் அவ்வாறு கட்டப்பட்டு இருந்த சிமெண்ட் தூணின் ஒரு பகுதியானது திடீரென இடிந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று நசுங்கியது. அதனுள் இருந்த ஒருவர் இடிபாடுகளில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த மீட்பு படையினர், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். மெட்ரோ அதிகாரிகளும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பலியானவர் பெயர் ராம்தான் யாதவ் என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டு உள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவ அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
' ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்' :தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
-
நயினார் பேசியது ஏற்புடையது அல்ல: திருமா கருத்து
-
காங்கிரஸ் பொதுச்செயலர் வரும் 17ல் சென்னை வருகை
-
அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்
-
உண்டியலில் கைவரிசை அறநிலையத்துறை அவசியமா?
-
தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்
Advertisement
Advertisement