' ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்' :தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
சென்னை: “குடும்பத் தலைவியருக்கு 5,000 ரூபாய் வழங்கியதால், தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, இனி யாரும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேச மாட்டார்கள்,” என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
தி.மு.க., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
அதில் பங்கேற்ற தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி அளித்த பேட்டி:
மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி குடும்பத் தலைவியருக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனால், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது; எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்து விட்டது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர், பிரதமர் மோடி துணையோடு, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முயற்சி செய்தனர்.
இதை தெரிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், முன்கூட்டியே 5,000 ரூபாய் வழங்கியுள்ளார்.
இதனால், தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஆதரவை, அனைவரும் அறிவர். எனவே, தி.மு.க., கூட்டணியில், இனிமேல் யாரும், ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்க மாட்டார்கள்.
ஆட்சியில் பங்கு குறித்து, காங்., தலைவர்கள் ராகுல், கார்கே, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசினால் பதில் சொல்லலாம். மற்றவர்கள் பேசுவதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தில் பேசிய பாரதி, “மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கிய தகவல் வெளியானதும், எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு மாரடைப்பு வந்து விட்டது.
“ஆட்சியில் பங்கு வேண்டும், வெங்காயம் வேண்டும் என கேட்டவர்கள் எல்லாம், 'சீட்' கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டனர்,” என கூறியுள்ளார்.
திமுக கும்பலுங்க ஓட்டுப்பிச்சைக்காக எந்தளவுக்கும் தரந்தாழ்ந்து செல்வானுங்க என்பது இந்த செயல்கள் மூலம் நிருபித்திருக்கிறானுங்க
உனக்கென்னப்பா. வாய் கிழிக்க என்ன வேணும் என்றாலும் பேசுவாய்? ஓட்டுக்களை பணம் கொடுத்து வாங்கியாச்சு. அத்தனை வூழல் பணமும் வெளியே வருது.
இவருக்கு ஓட்டு போட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.மேலும்
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ
-
திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
-
காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்