நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
திருப்பத்தூர்: 'எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழகத்தின் வெற்றிக்காகவும் தான் போராடுகிறோம். நமது அதி வேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது; 2019ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தான். 2026 சட்டசபை தேர்தலிலும் நாம் தான். திராவிட மாடல் 2.O ஸ்டார்ட் ஆகிவிட்டது. இது ஆணவத்தினால் சொல்லவில்லை. அரசின் சாதனைகள் மீது நம்பிக்கையில் சொல்கிறேன்.
ஸ்டாலின் கணக்கு
இதுவரையில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியும் திமுகவின் கோட்டையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 75 ஆயிரம் பூத்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 350 ஓட்டுகளைப் பெற வேண்டும். இதை செய்தால், 2 கோடியே 60 லட்சம் ஓட்டுகள் வாங்கி விடலாம். இந்தத் தேர்தலில் 2.50 கோடி ஓட்டுகளுக்கு குறையாமல் வாங்கியே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் 40 முதல் 50 ஓட்டுகளை திரட்டினாலோ, இலக்கை அடைந்து விடலாம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது தான் நமது இலட்சியம். இந்தத் தேர்தலுக்குள் திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒரு வாக்காளரை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும்.
திமுக ஆட்சி தொடர்ந்தால் தான் தமிழகத்தின் வளர்ச்சி தொடரும். மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 கொடுத்து, நேற்று காலை 1.31 கோடி பெண்கள் முகத்தில் ஒருசேர புன்னகையை உருவாக்கினோம். ஆனால், தேர்தலைக் காரணம் கட்டி மகளிர் உரிமைத் தொகையை தடுத்து நிறுத்த முயற்சிகள் நடந்தன. பாஜவைச் சேர்ந்த ஒருவரை வைத்து, தேர்தல் சமயத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யவும் மாட்டார்கள். நல்லது செய்ய விடவும் மாட்டார்கள்.
சர்ப்ரைஸூம்... ஷாக்கும்...
அதனால் தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல். ஓர வஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் ஒரு முகம் இருந்தால், அதுதான் மத்திய பாஜ அரசு. இது வரைக்கும் தமிழகத்திற்கு ஏதாவது சிறப்புத் திட்டம் அறிவித்தார்களா? நான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இதுவரை பதில் அளிக்கவில்லை.
பாஜவின் கிளைக் கழகமாக மாறி விட்டது அதிமுக. இபிஎஸ் எனக்கு சவால் விட்டுள்ளார். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி சமூக வலைதளங்களில் வலம் வருபவர் இபிஎஸ். சட்டம் ஒழுங்கு பற்றி பேச உங்களுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா? கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை, அதைத்தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள் எல்லாம் மறக்கடித்து விட்டதா நினைத்து விட்டீர்களா? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான் குளம் சம்பவங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைத்து விட்டீர்களா? இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கிறது.
அதிவேக இன்ஜின்
திமுக அரசை அவதூறுகளால் களங்கப்படுத்தும் உங்களின் பேச்சுக்களை மக்கள் நம்ப மாட்டார்கள். திராவிட மாடல் அரசை வடமாநில சேனல்கள் பாராட்டுகின்றன. திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழகத்தின் வெற்றிக்காகவும் தான் போராடுகிறோம். பாஜவின் டப்பா இன்ஜின் முன்பு, நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. மீண்டும் சொல்கிறேன், இந்த ஜனநாயகப் போரில் தமிழக அணியா? டில்லி அணியா?, இவ்வாறு அவர் கூறினார்.
@block_Y@
திமுகவுக்கு தாவல்
இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் நீலோபர் அஜீம் திமுகவில் இணைந்தார். வாணியம்பாடியைச் சேர்ந்த இவர், 2016 - 21 வரையிலான அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
block_Y
இப்போது தமிழ்நாடு இருக்கும் நிலையில் இந்த 5000 தேவையா ஆனால் இந்த பயம் இந்த நடுக்கம் ஆகாது
சாதனைய சொல்லி ஓட்டுக் கேட்கத் தெரியல.₹ 5௦௦௦ ... மக்களை சாராயத்தில் மிதக்க விட்டு வெளியில் கடனை வாங்கி அதை திட்டங்கள் மூலம் கொள்ளையடிக்கும் இஞ்சின் இது.
தமிழக ஆட்சியின் அவலங்களை என்டிஏ கூட்டணி புட்டுப்புட்டு வைத்து பிரச்சாரமே செய்யலை .....
இருந்தாலும் இரும்புக்கர சாருக்கு தோல்வி பயம் .....
உன்ன சொல்லி குற்றமில்லை...என்னை சொல்லி குற்றமில்லா... காலம் செய்த பாவமடி...!!!
ஊழல் அடிப்பதில் வேகம் குறையாது அதனால் தலை குனியாது
லொட லொட எஞ்சின். 10. லட்சம் கோடி கடன்சுமை. எஞ்சினுக்கு பெட்ரோல் டாஸ்மாக் வரும்படி. ஆகையால் ஸ்டெியாக போகாது. தள்ளாட்டம்தான்.
என்ஜினுக்கு ஏது தலை. யாரோ எழுதி கொடுத்தால் அப்படியே படித்து விடுவதா, யோசிக்க வேண்டாம்?
உயிருள்ள மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்குத்தான் தலை உண்டு. இதில் இன்ஜின் எந்த உயிரினத்தை சேர்ந்தது? உயிரற்ற பொருளான அந்த இன்ஜினுக்கு தலை இருந்தால்தானே அது தலை குனியும்? ஒரே குழப்பமா இருக்கே?
நமது அதிவேக இன்ஜின் என்றும் தடம் புரளாது என்பதுதான் சரியாக இருந்திருக்கும்.
இனிமேலாவது நல்ல தமிழ் தெரிந்தவர்களிடம் எழுதி வாங்கிப் படியுங்கள் மாண்புமிகு முதல்வரே!
ஒரு ஆட்சிக்கு நல்ல பெயர் மக்களால் கிடைக்க வேண்டும்.
நீங்களே தம்பட்டம் அடிக்க கூடாது.இந்த அடிப்படை அறிவு கூட .......
படிக்க வேண்டும் என்றால்தான் புத்தகத்தை பார்க்க தலை குனிய வேண்டும். குடிக்க தலை நிமிர்ந்திருக்கும்மேலும்
-
மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாள மக்கள் கோஷம்
-
ரஷ்யா - உக்ரைன் தண்ணி காட்டுகின்றன; அமெரிக்க அதிபர் புலம்பல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது; ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
-
கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்