இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது; ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி

4

புதுடில்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது என காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.




இது குறித்து பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் பொய்களை பரப்பி தனது எதிர்மறை அரசியலால் இந்தியாவின் வளர்ச்சியை நாசமாக்க முயற்சிக்கிறார்.
விவசாயிகளையும், ஏற்றுமதியாளர்களையும் தவறாக வழிநடத்தும் ராகுலின் செயலை அம்பலப்படுத்துவேன்.


38 வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய எங்கள் வர்த்தக ஒப்பந்தங்கள் ரூ.45 கோடிக்கு அதிகமான ஜவுளி ஏற்றுமதிக்கு வாய்ப்புகளை உருவாக்கும். இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
ராகுல் ஜவுளி ஏற்றுமதியாளர்களைத் தாக்கி, நமது இந்திய விவசாயிகளை பயமுறுத்த முயற்சிக்கிறார்.

வங்கதேசம் இந்தியாவிலிருந்து 2.7 பில்லியன் டாலர் பருத்தியை இறக்குமதி செய்கிறது என்பதும் அவருக்குத் தெரியாது. இந்திய பருத்திக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்.


இந்திய விவசாயிகள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் இருவரும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மத்திய அரசு செய்துள்ள பிற ஒப்பந்தங்களால் பெரும் ஆதாயத்தை பெறுகிறார்கள். இந்திய மக்கள் பிரதமர் மோடியை நம்புகிறார்கள். ராகுலின் பொய் பிரசாரம் தோல்வி அடையும். இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

Advertisement