உள்ளூர் வர்த்தகத்துக்கு ஆதரவாக ஊர்வலம்

திண்டுக்கல்: உள்ளூர் வணிகர்களை ஆதரித்தும், உள்நாட்டு உற்பத்தியை 5 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு எட்டும் முயற்சியாக மார்ச் 1ல் திண்டுக்கல் சபரி மஹாலில் வர்த்தகர்கள், தொழில் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடக்கிறது.


இதன் ஒருபகுதியாக பி.என்.ஐ., திண்டுக்கல் சார்பில் டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதை அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம் துவக்கிவைத்தார். கோட்டை மாரியம்மன் கோவிலில் துவங்கி சபரி மஹாலில் முடிந்தது. திண்டுக்கல் பி.என்.ஐ., நிர்வாக இயக்குனர் ஜெகன், அனிதா பழனிசாமி கலந்துகொண்டனர்.

Advertisement