சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் கணக்கன்குளம்
நத்தம்: நத்தம் அருகே வேம்பார்பட்டி கணக்கன்குளம் சீமைக்கருவேல மரங்கள், நீர் வழி வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பால் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
2.5 ஏக்கரில் உள்ள இக்குளம் நிறைந்தால் சுற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் தென்னை, மா விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்கும். பருவ மழையளவு இந்தாண்டு போதியளவில் பெய்யாததாலும் நீர்வழி வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் உள்ளது.
2018- - 19ல் ஊராட்சி பொது நிதியில் குளத்தில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. மேலும் குளத்தின் ஒரு பகுதியில் மட்டும் அதிக ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு உள்ளது. இதோடு நீர் வழி வாய்க்கால், குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தில் தண்ணீரை தேக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே ள்விக்குறியான விவசாயம் ராஜ்கபூர், காங்., வட்டாரத் தலைவர் : கணக்கண் குளத்தை பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் எடுத்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் 5 ஆண்டு களுக்கு மேலாக முறையாக பராமரிப்பு இல்லாததால் மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ள விவசாயம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் மழை பெய்தும் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது குளத்திற்கு தண்ணீர் வரும் நீர்வழி வாய்க்கால்களை சுத்தம் செய்து மழைக் காலங்களில் குளத்தில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாணார்பட்டி நத்தம் ஒன்றியங்களில் தினமலர் நாளிதழில் வெளியான செய்தியால் 10க்கு மேற்பட்ட குளங்களை துார்வாரி சீமைக் கருவேல மரங்களையும் அகற்றி வருகின்றனர். அதேபோல் இக்குளத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
ஆயிரம் நாட்டுப்புற பாடல்கள்
-
ஒப்பற்ற ஒப்பனைக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமலதா
-
'நெலத்து வாடை'யில் நுகரலாம்...: ஈர நிலத்தின் இலக்கிய வாசனை!
-
மரணத்தில் முடிந்த... K எனும் மாய உலக பயணம்
-
எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம்: உக்ரைன் அதிபர் புலம்பல்
-
வாழ்க்கையில் வெற்றிக்கு இவை மிகவும் அவசியம்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அட்வைஸ்