மாவட்ட கிரிக்கெட் ‛லீக் போட்டி
திண்டுக்கல்: மாவட்ட கிரிக்கெட் சங்கம், டேக்.டி.டி.சி.ஏ., சார்பில் பிரசித்தி வித்யோதயா, ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் டிராபிக்கான லீக்' சுற்று கிரிக்கெட் போட்டிகள் ஸ்ரீவி, ஆர்.வி.எஸ்., பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானங்களில் நடந்தது.
காந்திகிராமம் கிராமிய பல்கலை அணி 24.4 ஓவர்களில் 110 ரன்கள் (டி.ராஜேஷ் 30, எம்.வெங்கடேசன் 4 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் காட்சன் கிரிக்கெட் கிளப் அணி 13.1 ஓவர்களில் 114/1 ரன்கள் (ராஜசேகர் 49, ராஜா 39) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் லெவன் அணி 18 ஓவர்களில் 71 ரன்கள் (அருண் பிரகாஷ்ராஜ் 31, ஜெயகாந்தன் 4, கோபிநாத் 3 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஆரஞ்ச் சர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 15.1 ஓவர்களில் 75/2 ரன்கள் (விஸ்வநாதன் 35) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் ஆதித் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 147 ரன்கள் (மனோஜ் ஜீவன் 31, சுதிர் 52,டோமினிக் சாம்சன் 3 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய ஒட்டன்சத்திரம் சாமுராய் கிரிக்கெட் கிளப் அணி 18.5 ஓவர்களில் 149/1 ரன்கள் (அசைன் 83, ஹரிஹரன் 46) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் சச்சின் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 153/9 ரன்கள் (ஷேக் பரீத் 83, தியாகராஜன் 3 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 15.1ஓவர்களில் 83 ரன்கள் (நாகராஜ் 4 , மருதுபாண்டி 4 விக்கெட்கள்) எடுத்து தோல்வி அடைந்தது.
நிலக்கோட்டை வாரியர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 21 ஓவர்களில் 104 ரன்கள் (சுப்ரதீபன் 4, விக்னேஷ்வரன் 3 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் மன்சூர் கிரிக்கெட் கிளப் அணி 17.4 ஓவர்களில் 109/6 ரன்கள் (நவீன்குமார் 59, லட்சுமணக்குமார் 3 விக்கெட்கள்) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் ஸ்கை கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 143/8 ரன்கள் (பாலாஜி 31) எடுத்தது. எதிர்த்துவிளையாடிய எரியோடு ஸ்கில் கிரிக்கெட் கிளப் அணி 20.4 ஓவர்களில் 163 ரன்கள் ((விக்னேஷ் 30, ரமேஷ்30, பிரவீன்குமார் 37, முகமதுயாசின் 4 ,கார்த்திக் 3 விக்கெட்கள்) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் சச்சின் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 174/9 ரன்கள் (கமலக்கண்ணன் 31, தினேஷ்குமர் 55, அருண்குமார் 4 விக்கெட்கள்) எடுத்தது.
எதிர்த்து விளையாடிய நிலக்கோட்டை வாரியர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 23,3 ஓவர்களில் 163 ரன்கள் (கருப்பையா 52, சதீஸ்குமார் 4 விக்கெட்கள்) எடுத்து தோல்வி அடைந்தது.
பழநி சுப்பிரமண்யா கிரிக்கெட் கிளப் அணி 24.1 ஓவர்களில் 146 ரன்கள் (ஸ்ரீநிவாசன் 58, விஷ்ணு 44, மதுபாலன் 5 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பாரத் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 147/8 ரன்கள் (விவேக் 55, சூர்யா 5 விக்கெட்கள்) எடுத்தது.
மேலும்
-
ஆயிரம் நாட்டுப்புற பாடல்கள்
-
ஒப்பற்ற ஒப்பனைக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமலதா
-
'நெலத்து வாடை'யில் நுகரலாம்...: ஈர நிலத்தின் இலக்கிய வாசனை!
-
மரணத்தில் முடிந்த... K எனும் மாய உலக பயணம்
-
எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம்: உக்ரைன் அதிபர் புலம்பல்
-
வாழ்க்கையில் வெற்றிக்கு இவை மிகவும் அவசியம்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அட்வைஸ்