வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்; இந்திய அணி அதிரடியாக ரன் குவிப்பு
கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இஷான் கிஷானின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி மளமளவென ரன் குவித்து வருகிறது.
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தத் தொடரில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேசத்திற்கு ஆதரவாக இப்போட்டியை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், பின்னர் ஐசிசி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போட்டியில் பங்கேற்க சம்மதித்தது. இதனால், இவ்விரு அணிகள் விளையாடும் போட்டி, ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
இந்த சூழலில், இலங்கையின் கொழும்புவில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் களமிறங்கினார். சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டார். அதேபோல, அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போட்டி துவங்கியதும் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, விஸ்வரூபம் எடுத்த இஷான் கிஷான் பாகிஸ்தான் பவுலர்கள் வெளுத்து வாங்கினார். சிக்சருக்கும், பவுண்டரிக்குமாக பந்துகளை பறக்க விட்டார். இதனால், 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். 40 பந்துகளில் 77 ரன் எடுத்திருந்த போது இஷான் கிஷான் போல்டானார்.
@block_Y@
மீண்டும் சூர்யா
கடந்த முறை பாகிஸ்தான் கேப்டன் மற்றும் வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்கவில்லை. இது பெரிய பேசுபொருளானது. இன்றைய ஆட்டத்தில் அப்படி மீண்டும் நடக்கக் கூடாது என்று பாகிஸ்தானின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், டாஸ் போடும் நிகழ்வுக்குப் பிறகு, பாகிஸ்தான் கேப்டனுடன் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் கைகுலுக்காமல் சென்றுள்ளார்.
block_Y
இந்த பயங்கரவாத நாட்டை அனைத்து விளையாடுப் போடிகளிலும் விளையாட தடை விதிக்க வேண்டும்.
ஆமாம்..அந்த நாடு பகை நாடுதான் அதோடு கிரிக்கெட் ஆடுவதே வேண்டாத வேலை இதில் கை குலுக்காவிட்டால் குடி முழுகிப் போயிருமா என்ன? இன்னும் இந்தியர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை கஜினி முகமது படையெடுப்பின் போது சோமநாதபுர சிவாச்சாரியார்கள் தரையில் விழுந்து வணங்கி கேட்டுக் கொண்டால் ஆலயத்தை காப்பாற்றலாம் என்று நம்பின அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள்
நாம் டீல் பண்ணிக் கொண்டிருப்பது ஒரு பயங்கரவாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நாடு நினைவிருக்கட்டும்
மேட்சில் வென்ற பிறகு கை கொடுப்பது பற்றி யோசிப்போம்
இயற்கையும் கை கொடுக்கும்மேலும்
-
அறிவியல், ஆன்மிகம் இன்றி செயல்பட முடியாது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
-
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
-
வங்கதேச பிரதமராக தாரிக் நாளை பதவியேற்பு; விழாவுக்கு மோடிக்கு அழைப்பு; ஓம் பிர்லா பங்கேற்பு
-
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
-
உடல்நலம் பாதிப்பு: பஞ்சாப் முதல்வர் 'அட்மிட்'
-
உறுப்பு தானம் செய்த குழந்தை அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்