மதுரையில் ரூ.213 கோடியில் கட்டிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலம் என்று பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவின் விவரம் வருமாறு;
நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது திராவிட மாடலில், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள தேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்.
தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணாத்துரை சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கென பாதையை உருவாக்கி, நம் தென் மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.
ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21ம் தேதி என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பாலம், விழாவிற்கு மேயர் அழைக்க முடியாத சூழ்நிலை.. ஏன் என்றால் மேயரே இல்லாத மாநகராட்சி.. இதுதான் திராவிட மாடல்.. பெரும்பான்மை கவுன்சிலர்கள் இருந்தும் அவர்களில் ஒரே ஒரு மேயரை தேர்வு செய்ய முடியாத கட்சி.. இதில் வாய் சவடால் வேறு.மேயர் நியமனத்திற்கும் இந்த பாலத்தின் நேதாஜி பெயருக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ
.
எது எப்படியிருந்தாலும்.... இந்த பெயர் வைத்தது பாராட்டுக்குரியது
நேதாஜி - தேர்தலுக்கு முன்பு. கலைஞர் கருணாநிதிஜி - தேர்தலுக்கு பின்பு. திமுகவின் தில்லாலங்கடித்தனத்தில் இதுவும் ஒன்று.
கான் கிராஸ் அடிக்கப்போகும் அடி மிக பலமோ.
தேசிய வாதிகள், பிஜேபி ஒட்டு கண்டிப்பாக கிடைக்காது
அப்பாடி இப்போதானய்யா இவருக்கு தேச பற்று வந்துள்ளது இதுவரைக்கும் குடும்பத்தலைவர்கள் பெயரையே சூட்டி சூட்டி அலுத்து போய்விட்டதாம் இனி தேசத்தலைவர்கள் பெயர்களை தேர்தல் முன்னிட்டு வைப்பாராம் எது எத்தனை காலம் வரை என்று தெரியாது
தேர்தளுக்காக ஒருவர் தேசீயவாதி ஆகிவிட்டார்
காவடி எடுக்க வேண்டிய நேரம் ஆதலால் என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்
வோட்டு அரசியல். இல்லையென்றால் என்ன பெயர் என்று எல்லோருக்கும் தெரியும்
ஒரு 1.3 km நீளமுள்ள மேம்பாலத்திற்கு ரூ. 213 கோடி செலவாகுமா? நேர்மையான கட்டிட வல்லுநர்கள் உண்மையாக எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள் பார்க்கலாம்?